single tea

என்ன பெரிய சாப்ட்வேர் இஞ்சினியரு? பொல்லாத சாப்ட்வேர்…

என்னத்துக்கு நம்ம பையனையும் அவர் பையனையும் கம்பேர் பண்றாரு? கடைசியா அவர நம்ம கண்ணனோட ப்ளஸ் டூ ஸ்கூல் பேரன்ட்ஸ்-டீச்சர்ஸ் மீட்டிங்ல பார்த்தது… இன்னிக்கி நம்ம கண்ணனப்பார்த்து…

“என்னப்பா அக்ரியா படிச்ச, ஏதாவது வேலை கீல பாக்கறியா? “ னு இளக்காரமா கேட்டா எனக்கு எப்படி இருக்கும்?

இங்க பாரு… உங்கிட்ட கேக்கப்படற எல்லாக் கேள்விகளுக்கும் நீ பதில் சொல்லிகிட்டிருந்தா வாழவே டைம் இருக்காது… வா.வா. மணமேடைக்கு படி ஏறிப்போகணும்…

அட இல்லீங்க …பரந்தாமன் இவ்ளோ பெரியவரு, பெரிய கெஸட்டட் போஸ்ட்ல இருந்து ரிட்டயர் ஆனவருன்னு நெநச்சிட்டிருந்தேன். அவரே ஏன் இப்பிடி சின்னப்புள்ளத்தனமா பீத்திக்கிறாரு?

அவர் பையனப்பத்தி அவர் பெருமப்பட்டுக்கறாரு உனக்கென்னம்மா… இந்தா கல்கண்டு…  ஸ்வீட் எடு கொண்டாடு… ஹா ஹா

கொண்டாடறதா? கோவம்தான் வருது…அமெரிக்கால வேலை செய்யறான்னா என்ன பெரிய கொம்பா?

இங்க பாரு… எதோ ஒண்ணு ரெண்டு அல்ப சில்லற கேசுங்களுக்காக் எல்லா சாப்ட்வேர் பசங்களையும் குத்தம் சொல்லாத… கூல் டவுன்… இந்தா பன்னீர் தெளிச்சிக்கோ..

சரிதாங்க …  நம்ம கண்ணன் அக்ரி தான் படிச்சான் ஆனா இவனுக்கு கம்ப்யுட்டர் தெரிஞ்ச அளவு பரந்தாமன்பையனுக்கு விவசாயம் பத்தி தெரியுமா?தெனம் மூக்குப்புடிக்க முழுங்கறானே சோறு அந்த அரிசி மரத்துல விளையுதா? கொடியில காய்க்குதான்னு தெரியுமா? சாப்டுவேர் படிச்சாலும் சாப்புட்டு தான உயிர் வாழ முடியும்…

மா… அவரு கெடக்கட்டும். நம்ம கண்ணன்  அக்ரி படிச்சானேன்னு  உண்மையில நான் சந்தோஷப் படறேன்… புத்தகப் படிப்ப விட  எவ்வளவு விதவிதமான உலக அனுபவங்களும் கெடைச்சுருக்கு அதனால… அதாம்மா உண்மையான வாழ்க்கைக்கான அறிவு… படியப் பார்த்து கால வை… விழுந்துடாத…

அடப் போங்க… ஏன் உங்களுக்கு கோவமே வரல… எனக்கு நல்லா வந்துது அடக்கிகிட்டேன்… வேற யாருமே இதுவரை அமேரிக்கா போனதே இல்ல.. இனிமேலும் போகப்போறது இல்லங்கற மாதிரி இல்ல பேசறாரு… பெரிய நயாக்ராவுல போட்டோ எடுத்துட்டாராம்… அப்படியே அதுல தள்ளிவிட்டுடலாம் போல தோணுது…

அட நீ விட மாட்டியா? கண்ணன் பாஸ்போர்ட்ட பாத்தா தெரியும், எத்தன நாட்டுக்கு இதுவரை ட்ராவல் பண்ணி இருக்கான்னு… அதுக்காக அவர்கிட்ட பதிலுக்கு பதில் இந்தான்னு காமிச்சி சண்டை போடணுமா? அதவிடு… ஒரு நாள் இவர் பையனால கிராமத்துல இருக்க முடியுமா? இத்தனைக்கும் அவன்பொறந்ததே அங்க தான… ஆனா நம்ம பையன் எந்த எடத்துலயும் சர்வைவ் ஆகறதுக்கு கத்துகிட்டிருக்கானே… லைப்ல அது தாம்மா முக்கியம்… ஜில்லுனு ஜூஸ் குடி… ரொம்ப சூடா இருக்க…

silicon

ஆமா? இவர் பொண்ணத்தான நம்ம ரங்கசாஸ்திரி அவர் பையனுக்கு கேட்டாரு?… என்ன ஆச்சு?

அந்தக்கதையா? பரந்தாமன் கிட்ட கேட்டாராம்.. அதுக்கு, குடுமி வச்சுக்கிட்டு இருக்கான் பையன். அதுவும் இல்லாம வேதம்தான் படிச்சிருக்கான் புரோகிதம் பண்றதத் தவிர வேற வேலை இல்ல அதுனால பொண்ணுக்குப் புடிக்கல… வேண்டாம்னு சொல்லிட்டாராம் … தன் பையன் மாதிரியே சாப்ட்வேர் தான் வேணுமாம்…

சரிதான்… இன்னொண்ணா? வேதம் படிக்கறதுக்கே புண்ணியம் பண்ணிருக்கணும் அதவிட அத சொல்றதுக்கு… எத்தனயோ பேர்  பாடசாலைல படிச்சி புரோகிதர்களா நல்லா சம்பாதிச்சி குடும்பத்தோட சந்தோஷமா வாழறாங்க…. இவர மாதிரி ஒருத்தர்தான்  தன் அழகான பொண்ண சாப்ட்வேர் மாப்ளைன்னு கல்யாணம் பண்ணிகுடுத்து  அந்த பொண்ணு போயே போச்சு… பெங்களுர்ல…

The-dignity-of-work_The-People-Equation

ஏ… கல்யாண வீட்ல ஏன் டென்ஷன் ஆகற…  இது தான் இப்போ கல்யாண வயசில பொண்ணோ பையனோ இருக்கற பல பேரண்ட்ஸ் மைண்ட்செட். ஒரு ஜெனரேஷனே அப்டி மாறிட்டாங்க… அதுதான் அப்படி அதுல என்ன என்ன மோகமோ தெரியல… சீக்கிரமா நெறைய சம்பாதிக்கற ஒரு ப்ரொபஷன் இல்ல…

 

ஏங்க… ஆர்ட்ஸ் காமர்ஸ் அட படிப்பே இல்லன்னா கூட என்ன? படிப்பு, எத்தன டிகிரி இதெலாம் பாத்தா பொண்ண குடுக்கணும்? பரந்தாமன் பையன் என்ன மெரிட்லயா படிச்சான்? லட்ச லட்சமா குடுத்து பேமென்ட் சீட்ல தான் படிச்சான்… அதுக்கே இப்படி அலட்டலா?

படிப்பு மட்டுமா முக்கியம்? நம்ம கண்ணன் காலேஜ் கல்சுரல்ஸ், சோசியல் சர்வீஸ்ன்னு எவ்வளோ பண்ணிருக்கான்…  வெற்றி, தோல்வி, கஷ்டம், எல்லாம் அனுபவிக்கணும்… இதெல்லாம் யாருகிட்டயும் எக்ஸ்ப்ளெயின் பண்ணவேண்டிய அவசியம் இல்ல… இந்தா… நல்லா காத்து வர எடமா பார்த்து உக்காரணும் ஆமா…

silicon_valley_road_sign

இந்தா பெப்ஸி குடி. இந்த கம்பெனியோட உலக CEO இந்திரா நூயி தெரியுமா? அவங்ககூட  இஞ்சினியர்  இல்ல … சென்னைலதான் படிச்சாங்க. அட, பில் கேட்ஸ் என்ன சாப்ட்வேரா  படிச்சாரு? சாதாரண டிகிரி கூட முடிக்கல. அதுக்காக…

சரி… நம்ம கண்ணனோட காலேஜ் ப்ரண்ட்ஸ் எத்தன பேர் இன்னிக்கு நல்ல வேலைல நல்லா இருக்காங்க நீயே பாக்கறல்ல… சொந்தத் தொழில், ஹைடெக் விவசாயம், பேங்க்கு, கவர்ன்மென்ட் சர்வீஸ், டீச்சிங், ஏன், பல பொண்ணுங்க ஹேப்பி ஹோம்மேக்கர்ஸா இருக்காங்க. சிலபேர் சினிமா பீல்டுல கூட…. சரி சரி… நாதஸ்வரம் நல்லா இருக்கு. அதக்கேளேன்…

நீங்க ஒண்ணு… அவன் இங்க இருந்தப்பவே வீக்கெண்டானா பார்ட்டிதான், முணுக்குன்னா மாயாஜால்தான் தண்ணியா தண்டச்செலவு… அல்பனுக்கு திடீர்னு பவிசு வந்தாமாதிரி…

பாருடா.. மாயாஜால் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?

எனக்கு எப்படித் தெரியும்னு கேட்டா? பேஸ்புக்கே அதுக்குதான இருக்கு. போட்டோவெல்லாம் பாப்பேன்.

சரிதான்… கடன் வாங்கி வெளிநாட்டுல படிக்கப்போய், அட் லீஸ்ட் வீடு வாடகை குடுக்கவாவது சம்பாதிக்கணும்னு ஒரு இந்தியன் மளிகைக்கடையில  மொளகாப்பொடி பொட்டலம் போட்டானே உன் பையன்… அவன் கிட்ட கேக்க சொல்லு  பணத்தோட அருமைய சொல்லுவான்… நீ அமைதியா இரு இப்போ…

அதா நெனச்சா எனக்கு இப்போ கூட வருத்தமா இருக்கு…

ஆனா எனக்கு பெருமையாவும் இருக்கு… “என்னவிட வயசில சின்னப்பசங்க எல்லாம் இதே மாதிரிதான் கஷ்டப்படுறாங்க அதப்பார்க்கும் போது எனக்கு பரவாயில்ல”ன்னு கண்ணன் சொன்ன போது… சரி… மொய் கவர் எங்க? அப்புறம் ஓசில சாப்ட்டு போறோம்னு சொல்லிடபோறாங்க…

இந்தாங்க…. அமெரிக்கா போயி, இன்னும் மோசம்… நல்ல சகவாசம் மாதிரி தெரியல… இத்தனைக்கும் எல்லாரும் தமிழ்தான். அரைகுறை டிரஸ், ஆம்பள பொம்பள வித்தியாசம் இல்லாம எல்லாம் ஏக்கலக்காவா இருக்கு. எல்லார் கைலயும் க்ளாஸ், சிகரெட்டு….

ஹேய்… அது அவன் சொந்த வாழ்க்கை… அதப்பத்தி சொல்ல யாருக்கும் உரிமை இல்ல…அதோ அந்த அம்மாவப்பார்த்தா அடுத்த தெரு அம்புஜம் மாதிரியே இல்ல…

அம்புஜம்னு யாரையுமே எனக்குத் தெரியாது… பேச்ச மாத்தாதீங்க…  இங்கயும் சரி அங்கயும் சரி… நல்ல பசங்களே இல்லையா சேர்றதுக்கு?

ஏன் இல்ல? நம்ப மோகன்? அமெரிக்கா போய் கூட ஏகாதசி விரதம் இருக்கறவன். எப்போ ஊருக்கு வந்தாலும் நம்ம வந்து பாத்து விசாரிச்சிட்டுப்போவானே… நீ அட்சதைய எடுத்துக்கோ… அப்புறம் பேசு….

அது அவன் அப்பாவுக்கு தெரியலயேங்க… எதுக்கு கம்பேர் பண்ணாரு?

அதாம்மா… வயசு,பதவி, படிப்பு, இதெல்லாம் மெச்சுரிட்டிக்கு அடையாளம் இல்ல…

உன் பையன் என்ன சொன்னான்?

அவன் ஒண்ணுமே சொல்லலைங்க… சிரிச்சிகிட்டே வரேன்னு சொல்லிட்டு நகர்ந்துட்டான்…

அதான் அவன் மெச்சூரிட்டி புரியுதா? என்கிட்ட இப்டி தான் ஒரு ஆபிஸ் ப்ரெண்ட் வந்து “மை சன் இஸ் கிளியரிங் 6000 டாலர்ஸ் எ மந்த் இன் யுஎஸ்…” அப்படின்னு சொன்னாரு… சரின்னேன்… அப்படியே விட்டுருந்தார்னா பரவாயில்ல…

“உங்க பையன்?”ன்னு கேட்டாரு… சொன்னேன். அதுவும் இந்தியால இருந்துகிட்டு வாங்கறான்னு சொன்னேன்… அவ்ளோ தான் மனுஷன் எஸ்கேப்… விடு… ஏ…  இந்த சேர் ஆடுது… வேற எடு…

சரி… சாப்பாடு கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் ஏதும் சொல்லாதீங்க…. கஷ்டப்பட்டு கல்யாணம் பண்றாங்க…

ம்ம்ம்.. ஓகே … என்ன நீ பொண்ணோட நகை, பொடவை டிசைன் எதப்பத்தியுமே பேச மாட்டேங்கற… ஹா ஹா…

கிண்டலா? சரி சரி… அங்க பாருங்க… உங்களைத்தான் கூப்டறாரு பரந்தாமன்… பந்தியில பக்கத்துல எடம் போட்டு வச்சிருப்பாரு… சிக்கினோம், சிலிக்கான் வேலில சிங்கள் டீ குடிச்சது, கலிபோர்னியால கடுங்காப் பி குடிச்சதுன்னு ப்ளேடு போடுவாரு… இப்படி வாங்க…

 

ஓகே..ஓகே… கேக்குது… வா நைஸா  எஸ்கேப் ஆகிடுவோம்….

FOR MY FRIENDS WHO DON’T KNOW TAMIL…

Why there had been (unfortunately, still continues to be) an unfounded craze or rage over software professionals? Is it because they used to land in good white-collar jobs and earn high pretty quickly than their counterparts in civil or mechanical streams?check this lin

https://asmalltownkid.wordpress.com/2014/10/28/degree-or-character/

——————————-