Untitleddonkey-fair-India

 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் வரும், பல சினிமா பிரபலங்கள், பேச்சாளர்கள், அறிஞர்கள் (?) பங்கு பெறும் நிகழ்ச்சி.

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிக்கா என போய்போய்  கழுவிக்கழுவி ஊத்திவிடுவாங்க…

கல்யாண வயதில் ஒரு பெண்ணோ, பையனோ இருந்தால், அலாரம் வைத்தாவது எழுந்து பெற்றோர்கள் பார்க்கும்  நிகழ்ச்சி… இது மூலமா என்ன கருத்து சொல்றாங்கன்னு (என்ன சொல்லி இருக்கணும்னு) பாப்போம்…

பொறந்ததுலேந்தே உஜாலாக்கு மாறின மாதிரி ஒரு பெரியவர் மிகப்பணிவாக, பவ்யமாக கேள்வி கேக்கராறு. நீங்க நெனச்ச மாதிரியே நல்ல வரன் அமையும்னு ஒவ்வொருத்தருக்கும் (மனசாட்சியே இல்லாம…) சொல்றாரு… (ஆனா அப்படி அமைஞ்சுதானு அன்னாடம் அனுபவிக்கறவங்களுக்க்குத் தான் வெளிச்சம்..)

சமீபத்தில் நான் பார்த்த (பார்க்க நேர்ந்த)  EPISODE இல் இருந்து…  அவங்க  சொன்னது என்ன,  சொல்லாதது என்ன, (சொல்லி இருக்க வேண்டியது என்னனு)   நீங்களே முடிவு பண்ணிக்குங்க…

 

பெண்: நான் B.A படிச்சிருக்கேன்…

Our mind voice: (அது இருக்கட்டும் உன் பேரு  &&&&&  தானே… 7  வருஷமா படிக்கற…  )   

பெரியவர்:  சரி சொல்லு… என்ன மாதிரி கணவர் எதிர்பாக்கற?

 

 

பெண்: என்னை அனுசரிச்சி நடக்கணும்…

Our mind voice: (அது தானம்மா காலம் காலமா எல்லா ஆம்பளைங்களும் பண்றாங்க…) 

பெரியவர்:   குறிப்பா உனக்கு என்ன வேணும்னு சொல்லு…

 

 

பெண்: அவன் நல்லா  சமைக்கணும்…

Our mind voice: (அப்படி சொல்லுடி என் ராசாத்தி… நீ நல்லா பாத்திகட்டி சாப்டுவியாமே…) 

பெரியவர்:  ம்ம்ம்…மேல…

 

 

பெண்: எங்க குடும்பத்த அனுசரிச்சு நடந்துக்கணும்…

Our mind voice: (நீ நடந்துக்குவியானு கேட்டுட்டு  அவர் ஒழுங்கா ஊட்டுக்கு போகமுடியுமா? தைரியம் இல்லம்மா… நீயே மனசு வந்து சொல்லிடு…)

பெரியவர்: கண்டிப்பா… அப்புறம்… அவன் என்னத்துக்கு உசுரோட?  நீ மேல சொல்லு…

 

 

பெண்: Government job ல இருக்கணும்…

Our mind voice: (அப்போ சொந்த தொழில் பண்றவங்க, பிரைவேட்ல வேலை செய்யறவங்க எல்லாம் காவி கட்டி காசிக்கு போகணுமா?)

பெரியவர்: ரொம்ப சந்தோசம்.. கால் காசுனாலும் கவர்மெண்ட் காசு இல்ல… அடுத்து??

 

 

பெண்: Professional degree (MBBS, CA, MBA only) படிச்சிருக்கணும்.

Our mind voice:  (நீ பையன கட்டிக்கபோறியா அவன் டிகிரியையா? ஆனா நீயே BA தான படிச்சிருக்க? அப்டின்னு கேட்டு பாவம் அவரோட வயசான காலத்துல என்னத்துக்கு ஏழரை…)

பெரியவர்:  ஓஹோ… பேஷ்….

 

 

 

பெண்: MBA  ன்னா ஒன்லி BE/MBA தான் வேணும்

Our mind voice: (ஓ… புரியுது… ஒடனே அமேரிக்கா போகணும். ஒயிட் ஹவுஸ் முன்னாடி உன் ப்ளாக் face அ போட்டோ எடுத்து, சுடச்சுட Facebook ல போடணும். என்னடா 25 லைக் தான் வந்திருக்குன்னு 25 நாள் ரூம் போட்டு அழணும்)…

பெரியவர்: இதவிட நியாயமான ஆசை உண்டா உலகத்துல…

 

 

பெண்: BE ன்னா ஒன்லி சாப்ட்வேர் தான்… வேற எதுவும் வேணாம்…

Our mind voice:  (பெட்ரமாக்ஸ் லைட்டே வேணுமா?…   சாப்ட்வேர் தவிர வேற எதாவது டிகிரி படிச்சவன் எல்லாம் ஒரு மனுச ஜன்மமா? அவனுக்கெல்லாம் எங்க நல்ல குணம், பழக்கவழக்கம் எல்லாம் இருக்கும்?) 

பெரியவர்:   ஓகே… நீ சொல்லுமா கண்ணு…

 

 

பெண்: Permanent job ல இருக்கணும்…

Our mind voice: (மனுஷன் அடுத்த நொடி உசுரோட இருப்பாங்கறதுக்கே எந்த உத்தரவாதமும்  இல்ல…) 

பெரியவர்: அது சரி,  உத்தியோகம், புருஷலக்ஷணம் … நீ கேக்கறது ரொம்ப சரி…

 

 

 

பெண்: நெறைய சம்பாதிக்கணும்… (அதான் “கவர்” Coverமெண்ட் இல்லன்னா சாப்ட்வேர் னு கேக்கறேன். புரியல?)

Our mind voice: (ஆமாமா… அப்புறம் எப்படி weekend parties அண்ட் வருஷா வருஷம் வெளிநாடு டூர் போறது… கடன் வாங்கியாவது  போயாகணுமே…  இல்லன்னா எப்டி மத்தவங்க மதிப்பாங்க?? நம்ம prestige என்ன ஆகறது?)

பெரியவர்:  இது ரொம்ப கரெக்ட் மா… நீ மேல போ…

 

 

பெண்: சொந்தக்காரங்க எல்லாம் சூனியக்காரங்க… So, எந்த “@@@” ம் வீட்டுக்கு வரவே கூடாது… (அதுவும் weekend நிம்மதியா தூங்கணும் … அப்ப வந்து உயிரெடுக்கக்  கூடாது…)

Our mind voice:  (தப்பித்தவறி எவனாவது வந்துட்டா அவ்ளோ தான் ஒரு மாசம் உன் புருசனுக்கு மண்டகப்படி நடத்துவ…) 

பெரியவர்: எப்டிமா வருவாங்க? நீங்க எங்கயாவது போனா தானே… கவலையே படாத…

 

 

பெண்: அடிக்கடி travel பண்ற job கூடாது…

Our mind voice:   (travel பண்றதெல்லாம் நல்ல job இல்ல… சரி அவனும் என்ன விரும்பியா போறான்? உன்கிட்டேந்து ஒருநாளாவது தப்பிச்சி சந்தோஷமா இருக்கத்தானே…)

பெரியவர்:    ஆமாமா  500 ரூபா மாசம் சம்பாதிச்சாலும் ஆபீஸ் மட்டும் போயிட்டு  வர வேலையா இருக்கணும்ல… என்ன நான் சொல்றது?

 

 

பெண்: தேவை இல்லாம இத பண்ணு, அத பண்ணாதனு  அட்வைஸ் பண்ணவே கூடாது… (என்ன பெருசு? புரியுதா?) 

Our mind voice:    (அ… நத்திங் ஆப்பீசர்…  YOU PROCEED…)

பெரியவர்: (ம்ம்ம்… எனக்கு வேணும் …)

 

 

பெண்: சோ, எனக்கு எத்த பையன் (இளிச்சவாயன்) கெடைப்பான்ல… (இல்லன்னா இந்த செட்டே இருக்காது… ஜாக்கிரத…)

பெரியவர் & ஆடியன்ஸ்: ALREADY IN AMBULANCE… 

 

இந்தக்கால பெண்களுக்கு ஒரு முன்மாதிரி மா நீ…

உன் மனம் போல ஒரு மாப்ள (மாங்காமடையன்) கெடைக்க

‘கல்யாண மார்க்கேட்’  சார்பா வாழ்த்தறோம் மா…

——————————————

FINAL TOUCH:

பின்னர் அந்த நிகழ்ச்சியின் 16 வது ஆண்டுவிழாவாம்… அதில் மைக் கெடச்சதும், உஜாலா பெரியவர் பேசுகிறார்…

“இந்த சமூகம் அழிவுப்பாதையில் செல்ல சினிமாவில் காட்டும் கேவலங்களே காரணம்…”

இதையும், மேடைக்கு கீழே உக்காந்து முன்வரிசையில் ரசிப்பதும்  அதே திரைஉலகம் தான்… ஆண்டவா!!!

 

(OUR MIND VOICE).. .

அய்யா என்ன சொன்னீங்க? one more repeat…

அப்போ நீங்க TV ல இவ்ளோ நேரம் காட்டினது என்ன??

——————————————

 

For friends who can’t understand Tamil… 

https://asmalltownkid.wordpress.com/2014/10/28/degree-or-character/