கருப்பில்லே வெளுப்புமில்லே…

skin skin

 

ஸ்கின் கிரீம்ஸ் உபயோகிச்சா வெள்ளத்தோலு மட்டுமில்ல வேற என்னென்னெல்லாம் கெடைக்கும்னு நம்ம கம்பெனிகள் நமக்கு சொல்றாங்க?

  • SUCCESS  – வெற்றி வெள்ளைத்தோல்லயா இருக்கு? அப்போ கருப்பா இருக்கரவங்களெல்லாம் வெற்றியே பெற்றதில்லையா?? செய்யற வேலைல இருக்கு அந்த வேலைய ஒழுங்க செய்யரதுல இருக்கு.
  • SELF-CONFIDENCE  அதாவது “தன்னம்பிக்கை” யாம்பா  – அப்போ மத்தவங்க எல்லாரும் தாழ்வுமனப்பன்மையோட தான்  உயிர் வாழறாங்க? வெள்ளைத்தோல் இருக்கறவ எல்லாம் மெத்தப்படித்த மேதாவிகள். அவங்களுக்கு தான் உலகத்த எதிர்கொள்ளும் நம்பிக்கை இருக்கு, அப்படித்தானே?
  • LOVER / HUSBAND – அன்னிக்கே ஒரு கவிஞன் உங்க மரமண்டைல ஏறணும்னு கரெக்டா சொன்னான்…நீ தோலப்பார்த்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது” (Will it work if you choose your draft buffalo based on its skin color?) னு…  வெள்ளையா தோல் இருந்துட்டா அப்பிடியே அன்பின் மறு உருவங்களா?
  • BEAUTY – “அகத்தின் அழகு தான் முக்கியம், நிலையானது” னு திருக்குறள் படிக்கலையா? எங்க?
  • ATTRACTIVENESS – போதும் …  வேணாம்

அட மரமண்டைகளா…நல்லா பாருங்க…

எல்லா விளம்பரத்துலயும் வர்ற  MODELS  எல்லாருமே ஏற்கெனவே வெள்ளைத்தோல் காரிகள் தான்… அதுங்க இந்த கிரீம் USE  பண்ணித்தான் வெள்ளை ஆகணும்னு இல்ல… PLAN பண்ணி ஏமாத்தறானுங்க அதையும் நம்புறீங்களே…

இதுக்கெல்லாம் மேலயும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கரமாதித்தன் மாதிரி ” தான் நாங்க செய்வோம்னு  அப்படியே உங்க மூஞ்சிகள வெளுப்பா ஆக்கிட்டாலும்  என்ன அஜித்  கூட டூயட் பாடப்போறீங்கனு நெனப்பாஎதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு ?

உங்க அப்பனுங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கற காசெல்லாம் (கரிக்காவது உபயோகமுண்டு) கலர் கலரா  ஸ்கின் கிரீம் வாங்கி வாங்கி முழுங்கறீங்க…

THEN … SKIN SCORE னு…

வீட்ல தின்ன சோறே இருக்காது…  

அப்புறம் என்ன ஸ்கின் ஸ்கோரு…

சம்பளம் வாங்கிக்கிட்டு “சாணிய (SH*T)”  கூட சந்தோஷமா PROMOTE பண்ற கும்பல் இதுங்க… 

கொடுமை கேளுங்க மக்களே… ஒரு விளம்பரம்… அதுல… 

ஒரு பொண்ணு ஒரு brand பவுடர அள்ளிப்போட்டுகிட்டு  (குளிக்கறதே இல்ல… நாத்தத்த மறைக்கணும்… இல்லன்னா பையன் புடுங்கிக்கிட்டு ஓடிடுவான்ல… )

(திருட்டு) பைக்ல ஸ்டைலா வந்து…

ஒரு (மொக்கப்) பையன  பிக்கப் பண்றா..

(வூட்டவிட்டு ஓடி போற அளவு CONFIDENCE தருமாம்யா அந்த நாத்தம்புடிச்ச பவுடர்…) 

பெண்ணுரிமையை நிலைநாட்டற அளவுக்கு என்னவொரு proactive progressive thinking…. அதாவது முற்போக்குச் சிந்தனை… பாருங்க…

போலாமா?” 

அவன் தயங்கி நிக்கறான் … அவன் வீட்ட ஏக்கத்தோட பாக்கறான்… அப்போ அவன்கிட்ட சொல்றா … (தைரியம் குடுக்கறாளாம்)  

ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்…

reception க்கு எல்லாரையும் கூப்பிடலாம்…” 

 

(என்னக் கொடுமை சரவணன் இது???)

அதவிட, BACKGROUND SONG…   கேளுங்க மக்களே…. FIRST LINE  ல என்ன எழவ பாடறான்னே புரியல…

BUT செகண்ட் வரி தான் VERY IMPORTANT… அதாவது  ரொம்ப முக்கியம்… (மேஜர் சுந்தர்ராஜன் EFFECT… )

துவக்கம் சரியா இருக்கணும்….

“DAMNFLOWER  ன் புத்துணர்வு…

அடடா.. இதுதான் சரியான துவக்கமாம்யா… கேளுங்க… (வெளங்கிடும்…)

எனக்கென்னமோ அவ டயலாக் இப்படி தான் இருக்கணும்னு தோணுது….

ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்… 

அப்புறம் சோத்துக்கு இல்லாம

சிக்னல் சிக்னலா பிச்சை எடுக்கலாம்….”  

கரெக்ட்டா? நீங்களே சொல்லுங்க…

—————————————–