gangrape2_660_122912095616
nirbhaya_1378816080_540x540   woman-gang-raped    
Handcuffs 7   OB-VW093_imap01_G_20130103072433

வெறிநாய்ங்க கடிக்குக்கூட மருந்திருக்கு இந்த
வேசிமகன்க கடிக்குத்தான் விடிவே இல்ல..

பதவிக்கும் பணத்துக்கும் பல்லிளிச்சி நிக்கற
பச்சோந்திக் கூட்டத்துக்கு பயமே இல்ல…

ஒடம்புலத்தான் கற்புன்னு உறுதியா நம்பற
ஒலகத்தத் திருத்தத்தான் வழியே இல்ல…

கடிபட்டுக் கசங்கிப்போன பூவுக்கெல்லாம் இங்க
கண்ணீரத் தொடச்சுவிட நாதி இல்ல…

கண்ணகிக்குச் சிலைவைக்க ஆளிருக்கு இவங்க
கண்ணியத்தக் காப்பாத்த கதியே இல்ல…

காவல்துறை கட்சிகளின் கையாளானா கடைசியா
கயித்துல தொங்கிட்டாத்தான் கவல இல்ல…

—————————-

For those who cannot understand Tamil…

Dogs indeed are better but the a$$holes who rape women are the worst offenders ever because they all are born with conscience yet….

Power, money, corruption and bl@@dy politics and importantly, deeply entrenched social taboo and dogma against acceptance back in the families, all force the innocent victims to take their own lives.

——————-