mani

தமிழ்ல வேற கதையே  கெடைக்காம ராமாயணம் மகாபாரதம் எல்லாம் மசாலா தடவி பொரிச்சு குடுக்கற டைரக்டர் அடுத்து ஒரு ப்ராஜெக்ட் டிஸ்கசன் பண்றாரு…

அவர் டீம் அஸ் யூசுவல் சிட்டில வளந்த பசங்க, கான்வென்ட் இங்கிலீஷ், காலேஜ் டிகிரி, பிசினஸ் ஸ்கூல்ல MBA படிச்சவங்கல்லாம் தான் அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்…

எல்லாரும் A  & B  சென்டர்ஸ் சமுதாயத்துலேந்து… A  & B  சென்டர்ஸ் பத்தி கவலை இல்ல… நீ எந்த கண்ராவிய வேணாலும் எடுஆனா அதிமேதாவித்தனமா இருக்கணும்எவனுக்கும் ஒரு ரீல் கூட புரிஞ்சிட கூடாது….

ப்ளாக் ஸ்வான், இண்செப்ஷன், இண்டெர்ஸ்டெல்லார் மாதிரி…

அப்படி புரிஞ்சிட்டா…. ஹீ ஈஸ்  நோ ஜீனியஸ் யா ஜஸ்ட் ஏன் ஆவெரேஜ் பிலிம் டைரக்டர் பட்  நோ இன்டர்நேஷனல் லெவல் கிரியேடிவிட்டிலுக் அட் ஹாலிவுட்வாவ் வாட் கிரியேடிவ் பன்ச்  னு கேவலப்படுத்துவானுக…

பக்கத்துல இருக்கற தியேட்டருக்கு பாரின் காருல பவிசா வந்து பாப்கார்ன் திங்கறவனுக (வர்றவளுகளும்).

அதனாலேயே டைரக்டர் கும்மிருட்டுல, வெளிச்சம் கொஞ்சம் கூட இல்லாம, எல்லாரும் அவுட்லைன் போட மாதிரி தான் தெரியனும்….  வசனம் பேசி நடிச்சதெல்லாம் ஓல்ட் ஸ்கூல் ஆப் பிலிம் மேக்கிங்…

ஏன், எப்டி, எதுக்கு  இவ்ளோ தான் மொத்த படத்தோட டயலாக்கும் இருக்கணும்…

அதான் மேன் நியு ஸ்கூல் ஆப்  டிரக்ஷன் ன்னு சொல்லியே சாதாரண லெவல்ல எல்லாருக்கும் புரியற மாதிரி படம் எடுக்கறதே இல்ல.

இந்த Hi-Tec கூட்டத்துல ஒரே ஒரு பய மட்டும் ஊர்ப்பக்கம்… பாவம் ஒரு வெரைட்டிகாக அந்தப்பயல “C” சென்டருக்கு பிரதிநிதியா இருக்கட்டும்னு இவனுக கூட வச்சிருக்காரு டைரக்டர்…

பர்கர்களுக்கு நடுவுல பருப்பு வடை மாதிரி 

காட்பரீஸ் சாக்லேட்ஸ் கூட கடலைமுட்டாய் மாதிரி 

கப்புச்சினோக்களுக்கு மத்தியில கடுங்காப்பி போல 

ஒரு நாள் புது படம் ஆரம்பிக்க, செம்ம கதை ஒண்ணு சிக்கிருக்காம் டைரக்டர்க்குனு பேசிக்கிட்டாய்ங்க. பயலுக்கு கொஞ்சம் கிலி.

மகாபாரதமும் எடுத்து மக்களை கிருக்கய்ங்களாக்கியாச்சு

ராமாயணம் எடுத்து தொரத்தி தொரத்தி அடிக்கற அளவுக்கு இண்டர்நெட்ல பல பேர் கிட்ட நல்லா பல்பு வாங்கிகட்டிகிட்டாச்சு

அலைகள் ஓய்வதில்லையையே அரைச்சி ஆப்பம் பாயா போட்டு அவார்டும் வாங்கியாச்சு

இப்போ என்ன பழைய சரக்கு சிக்கிருக்கோ தெரியலையே? ன்னு பயத்தோடவே உள்ள வர்றான். 

இசைசூறாவளி.ஆர்ரும், கவிஞர்தயிரகுத்தும் வந்துட்டாங்க  

டைரக்டர் வர்றாரு…

டை: ஹேய் பாய்ஸ், ஹொவ்வார்யூ? எல்லார்ம் ரெடியா? எனக்கு பங்க்சுவாலிட்டி ரொம்ப இம்போர்டன்ட்கார்ப்பொரேட் கம்பெனி மாதிரிஏன்னா நான் எம்பியேஎம்பியேஓகே? 

நம்ம பய: அய்யா எம்ப வேணாங்க நான் வேணா ஸ்டூல் எடுத்துட்டு வரவா? ஏறி உக்கார?

டை: ஹேய் யூ !! STOP. STOP. I told MBA…. ஓ… நீ தான் அந்த சுக்காம்பட்டிலேந்து வந்த நாட்டுப்புறமாம்ம்ம் ஓகே…

அடடே!!!  என்ன ஆஸ்கார் தம்பி ஆளே இளச்சுட்டராத்திரி எல்லாம் கண்ணு முழிச்சு கம்பியூட்டர கசக்கி கசக்கி இசை எடுக்காதன்னு சொல்லி இருக்கேன்ல 

கவிப்பூவரசா? வாங்க வாங்கஎங்க? பகல்ல உங்க ட்ரஸ் மட்டும் தான் தெரியும். நீங்க அவுட்லைனா த்தான் தெரிவீங்க. நைட்டுல உங்க வெள்ளை ஜிப்பா  இல்லாம போனீங்கனா, டேன்ஜர் லைட்டு போட்டுக்குங்கஅதான் ஸேப்

ஓகே பிரண்ட்ஸ் லெட்ஸ் ஸ்டார்ட் தி டிஸ்கசன்…

ஹேய் என்னது இது? பேட் ஸ்மெல்?

நம்ம பய: ஐயா இது இட்லியும் கெட்டி சட்னியுங்க. காலைலயே வந்துட்டோமுங்களா?  அதான் நாஷ்டா…

டை: ஓ… நோ… முதல்ல எல்லாரும் பர்கர், பீசா, பிரேக்பாஸ்ட் சீரியல் ன்னு சாப்ட்டு பழகுங்கோ. அப்போதான் ஆலிவுட் மாதிரி திங்கிங் வரும்

தயிர் சாதம் சாப்டுட்டு தமிழனுக்கு புரியறமாதிரி படம் எடுத்தா
பாரின்ல நம்ம ஸ்டேடஸ் என்னாகறது? 

இன்டர்நேஷனல் லெவெல்ல யாரும் மதிக்க மாட்டாங்கோ…  மைண்ட் இட்…

நம்ம பய: (ஆமா. இதுக்கே மாசக்கடைசில சிங்கி தான். எங்க போய் பீசா, பர்கரு? இதோ இந்த நாய்ங்களே இருக்கறவரை வரை நெஸ் காபி, கப்புச்சினோ  தவிர வேற எதையும் தொடமாட்டானுகோ. பாருதான், கேபே காபிடே தான். கையில காசு இல்லனா பொத்திகினு பொறையும் டீயும் என்கூட நாயர்கடைக்கு வந்து குடிப்பானுவ)  சரிங்  சார்…

கவிஞர் .கு: ஆமாம்… ஆமாம்…

அதிமேதாவித்தனமே அறிவாளியின் அடையாளம்

அனைவருக்கும் புரிந்துவிட்டால் அதிலென்ன ஆச்சர்யம்?

அதுவேஅடியேனின் அவாவும்  

டை: நீங்க ஏதோ தமிழ்ல சொல்றீங்க. பட்   கான்ட் அண்டர்ஸ்டாண்ட்பிகாஸ் அயம் MBA, MBA… யு நோ  

நவ் வீ கம் டு தி ஸ்டோரி டிஸ்கசன்….

இருக்கற எல்லா புராணம் எல்லாத்தையும் நானே படமா எடுத்துட்டேன்.

என் கதையையே சுட்டு ஒருத்தன்நேருக்குநேராஎடுத்தான்அதையும் நானே ப்ரோடுஸ் பண்ணேன்.

இப்போ கதைக்காக பழைய தமிழ் நாவல் சிலது படிச்சு பாத்தேன். ம்ம்ம்தெளிவா புரியற மாதிரி எல்லா கதையுமே இருக்கு. நாட் சோ கிரியேடிவ்

இருந்தாலும் நான் ரொம்ப யோசிச்சு ஒரு கதை ரெடி பண்ணி இருக்கேன்…

நம்ம பய: (அய்யய்யோஇப்போ எந்த நல்ல நாவல எடுத்து கொதறப்போறானோ? தமிழ்த்தாயேதப்பிச்சு தாய்லாந்துக்கு ஓடிடு…) அப்டியா சொல்லுங்க சார்…

மத்தவிங்க: டமில் கதையா? வி ரீட் ஒன்லி இங்க்லீஷ் நாவல்ஸ்

எனிவே டெல் டெல்டமில் கதைஹீ ஹீ

டை: ஐ நோ கய்ஸ்…  இப்போ நெறைய பேர் இங்க்லீஷ் நாவல் கைல வச்சிகிட்டு ட்ரைன்ல பஸ்ல போறாங்கோ. அதுல எத்தன பேருக்கு பி சி டி கூட தெரியுமோ வீ டோன்ட் நோ… நா?

(Discussion continues…. in Part II)

Advertisements