sorry_crying_cartoon1

ஆரம்பிக்கும் போது இப்படி ஒரு ஒத்துமையான குடும்பமே இருக்க முடியாதுங்கற மாதிரி காட்டவேண்டியது…

ஆனா போகப்போக    (பாக்கறவங்க வீட்லயும் சேர்த்து தான்) 

  • ஒருத்தன் பைத்தியமாகிருப்பான்…
  • ஒருத்தி ஜெயிலுக்கு போயிருப்பா…
  • இன்னொருத்தி தற்கொலை செஞ்சுட்டிருப்பா…
  • இன்னொருத்தன் தாடி வச்சு தண்ணி போட்டு திரிவான்…

என்ன சூப்பர் கான்செப்ட்டுடா… !!!

கர்சீப், துண்டு, வேட்டி எல்லாம் கண்ணீரால் நனைந்திடுமே  –  அது
காயும் முன் இன்னொரு “புத்தம் புதிய மெகாத்தொடர்” வந்திடுமே….

அப்புறம் இன்னொருகொடுமை என்னன்னா?

இந்த வயசான HEROINES  க்கு  எல்லாம் ஜோடி சின்னப்பசங்களா  (relatively) கேக்குது … இவங்கதான் இந்த MASTER PIECE, MAGNUM OPUS க்கு எல்லாம் CREATIVE HEADS ஆம்யா…

“DOCTORATE IN DESTROYING FAMILIES”  ன்னு PhD பட்டமே குடுக்கலாம்… என்ன கிரியேட்டிவிட்டி பாருங்க ??

OK… நம்ம தினம் தினம் கேக்கற டயலாக்ஸ்…

சரியா சாயங்காலம் விளக்கு ஏத்தற வேளையில,  

“ஐயோ!! என் வாழ்க்கையே நாசமாப் போச்சே!!” 

வீட்ல ஏதாவது நல்ல காரியம் பேசும்போது…

“இரு இரு.. உன் குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வரல,
என் பேரு @@@@@@ தேவி இல்லடி”

வீட்ல  கல்யாணப் பேச்சு எடுக்கும் போதெல்லாம்…

“நீ உன் புருஷனோட எப்படி நிம்மதியா வாழ்ந்துடுவன்னு நானும் பாக்கறேன்டி”

(அந்த  &&& மூஞ்சிக்கு கெட்ட கேடு ரெண்டு பேர் அடிச்சிக்கிறாளுவ… கொடுமைடா சாமி )

விருந்தாளி யாராவது வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்கும் போது…

“வெக்கம் மானம் சூடு சொரணை இருந்தா இந்த வீட்டுக்குள்ள வராத”

அங்க கொடுமைக்கார வில்லி அப்பாவி (?) ஹீரோயின கொடுமைப்படுத்த படுத்த இங்க இவங்களுக்கு BLOOD PRESSURE (BP) ஏறும்…

அது வெறும் நாடகம் தான் நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்கன்னு கேட்டா

“உனக்கு மனசாட்சியே இல்லயா? அந்த பொண்ணு எப்படி கஷ்டப்படறான்னு பாரு”

ன்னு நம்மகிட்ட சண்டைக்கே வந்துடறாங்க…

TRP Chart

[தெரியாதவர்களுக்கு…. TRP means Television Rating Points அதாவது எத்தனை (லட்சம்) பேர் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை பாக்கறாங்க ன்னு மதிப்பிடும் ஒரு குறியீடு பா…]

TRP

அடப்பதர்களா… Mega serial னாவே முடியாததுதான… அதுலயும்  4 வருஷம், 5 வருஷம் னு இழுக்க இழுக்க காசு… ???

என் மரமண்டைக்கு ஒண்ணு மட்டும் புரியவே மாட்டேங்குது…  தினம் தினம் வந்து குடம் குடமா கண்ணீர் விட அப்படி என்ன மேக்கப்பு ??? …

ஆ…. இப்போ புரியுது…

ஒப்பாரிக்கும் ஒய்யாரம் வேண்டும் …
அழுகைக்கும் ஒரு அழகு வேண்டும் … 

அங்க தான் நிக்கறான் தமிழன்…

———————————————–