This should be the true announcement at the temples when there are special occasions such as Vaikunda Ekadeshi, Diwali etc

மக்களிடம் கையேந்தி வந்து அவர்களில் ஒருவராய் வாழும் ஏழைப்பங்காளன் போல் காட்டிக்கொண்டாலும்,
மழையில் மாடுகள் போல நனைந்து கொண்டு
அரங்கன் தரிசனத்திற்கு அவர்கள் காத்துக் கொண்டிருக்கையிலே,

அதிகாலையில் எழுந்து
ஆடம்பர ஆடையுடுத்தி

அரசு வாகனத்தில்
அளப்பறையாய் வந்திறங்கி,

பந்தோபஸ்த்துக்காக
பத்து நாள் முன்
பே
பணியில் (பனியில்)
பாடுபடும் காவலர்களை
ஏதோ உங்கள் வீட்டு வாட்ச்மேன் போல் கேவலமாய் பார்த்து,

வரிசையில் நிற்கும் ஏமாளி மக்களை (மாக்களை)
ஏளனம் கலந்த அகம்பாவத்தோடு
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு

அந்த அரங்கனின் அருளை
அந்தரங்கமாய் அனுபவிக்கச் செல்லும்

“மாண்புமிகுக்களே” வருக வருக!!

indian-politicians
ஏதோ மக்களுக்குச் சேவை செய்ய மட்டுமே
பிறப்பெடுத்தது போல் பிட்டை போட்டுவிட்டு,

IAS, IPS, IFS எல்லாம் படித்து,
பொது மக்களின் வரிப்பணத்தில் டிரெயினிங் எடுத்து, அதே
பொது மக்களின் வரிப்பணத்தில் மாச சம்பளமும்,

பிற வகைகளில் மற்றவைகளையும் அள்ளிக் குவித்து,
அநியாயம் செய்பவர்களை எதிர்க்க வக்கின்றி,
அரங்கனின் அருள் பெற மட்டும்
அதிகாரத்தை மிகச்சரியாகப் பயன்படுத்தி,
பதவி, பவர் உள்ளவர்களுக்கு மட்டும்
அரங்கன் முன்னுரிமை அளிப்பதாக பிறர் தூற்றுமளவு

அரும்பணியாற்றும்
“ஆட்சித்தலைவர்களே, ஆணையர்களே” வருக வருக !!

IAS-IPS-Bond

அவரவர் பதவிக்கேற்றவாறு முன்னுரிமை பெற்று
அப்பாவி பொது மக்களை
ஆறு ஏழு மணி நேரம் வரிசையில் நிற்க வைக்கவே
அவதரித்த
“அரசுப்பணியாளர்களே” வருக வருக !!

VIP 00008
மேலும்,
அண்ணணின் வலது கை சுண்டு விரல் நகங்கள்,
மாவட்டச் செயலாளர்கள்,
மாண்புமிகுக்களின் வீட்டு சமையல்காரனின்
மச்சானுக்கு ஒன்று விட்ட சித்தி பையன் என்ற சிபாரிசில்
பொது மக்களை எளிதில் கடந்து உள்ளே நுழையும்
“அல்லக்கைகளே” வருக வருக !!

vip

அரங்கனின் முன்
அனைவரும் சமமென்றாலும்,
அரசியல் பலமும்,
அரசு அதிகாரமும்
ஆக்குபை (occupy) செய்தது போக,
அவகாசம் இருந்தால் மட்டும்

அனைவரும் வருக !!
அரங்கன் அருள்பெறுக !!

The society has invented a special breed of humans called VIPs and VVIPs. They use their political power or government positions to secure their way to by-pass ordinary citizens waiting in queue for offering prayers.

They won’t bother to use their powers to unfairly gain an advantage over people who will be made to wait 6 – 7 hours in queue.

Hail it the damned “VIP Culture” !!!