241F7D8100000578-2877148-image-a-12_1418860695218

 

எமக்கு ஒரு கும்பகோணமென்றால் 

எம் சகோதரர்களுக்கு ஒரு பெஷாவர் 

 

பலர் அதை விபத்தென்பார்  

சிலர் இதை வீரமென்பார் 

எவர் என்ன சொன்னாலும்  

எரிந்தவை என்னவோ 

ஏதுமறியா இளம்பிஞ்சுகளே!!

 

மதத்தின் பெயரால் 

மனிதத்தை காவுகேட்கும் 

கொடியோர் தம் 

கொலைவெறி தாகம்தீர 

குடித்தது இன்று எம் 

குழந்தைகளின் உயிர் !!

 

புத்தகப்பையோடு 

புன்னகையும் ஏந்திச்சென்ற 

பூக்கள்மீது பொழிந்தது இன்று 

புல்லட் மழைதான் !!

 

சிரித்து விளையாடிய 

சின்னஞ்சிறு அரும்புகளை 

சிதைத்து அழித்தன 

C-4 ம்,

சிந்திக்கத் தெரிந்தும் 

சீரழிந்த சிறுமதியினரும் !!

 

உள்ளத்தில் ஈரமுள்ளோர் 

உயிரை உருக்கும் அந்த   

வேதனையை வெளிப்படுத்த 

வெறும் வார்த்தைகள் போதாது

 

ஏற்க இயலவில்லை 

எம் இனிய செல்வங்களே !!

எனினும் விடைகொடுத்தோம் 

ஏகமாய்க் கனக்கும் மனதுடன்.

இறைவனின் இன்னடியில் 

இனி பிறவாத நிலையெய்தி 

இனிதே இளைப்பாருங்கள் !!

 

 

—————————————–

Wondering what connects a sleepy small town in Southern India with Peshawar in Pakistan? About 10 years ago, 94 children died in the town of Kumbakonam in a school due to a tragic fire accident. While that was said to have been due to negligence, the latest firing and bomb attack in a school in Peshawar is nothing but a massacre that humanity cannot digest. It doesn’t matter what the causes are. But news of innocent children dying pains me more than anything in the world. 

132 innocent children + 9 teachers were murdered in a way people with conscience cannot accept.

OMG !! What a heart-breaking, bloody way to end the year… Mourning for those blessed souls and praying to God to give the families of the dead some solace… OMG !!!