41T878cx3GL._AA300_

“கோப்பால் கோப்பால்” னு கூடவே கொஞ்சிக் குலாவிட்டு கடைசில

“குத்துங்க எஜமான் குத்துங்க… இந்த பொம்பளைங்களே இப்படித்தான்” னு சொல்ல வைக்கற “லதா” போல் தான்….

இந்த MATHSம் எனக்கு….

BMBMYP Confused Man in Front of Math Formula Written on a Chalkboard

ஆரம்பத்தில் அது மேல இருந்த மோகத்துக்கு எங்கே கணித மேதை இராமானுஜனுக்கே COMPETITION குடுத்திடுவேனோன்னு எனக்கே ஒரு (பெருமையான) பயம் இருந்தது.

பண்ற தப்பெல்லாம் முன்னாடி பண்ணிட்டு பின்னாடி அப்பாவி போல ஜாலியா டூயட் பாடிக்கிட்டு சுத்தும் கோபால் மாதிரி

இதுல என்ன படிக்க வேண்டிருக்கு? அதான் எல்லாம் ஈஸியா தானே இருக்கு” 

னு நானும் சும்மா ஜாலியா சுத்திகிட்டிருந்தேன்.

images

அதே சமயம் கோபாலை மாட்டவைக்க தீவிரமாக அலையும் மலேயா போலீஸ் துப்பறியும் இலாகா உயர் அதிகாரிகள் போல தமிழ்நாடு கல்வித்துறை எனக்கெதிரா ஒரு பெரும் சதி பண்ணிக்கிட்டிருக்கும்னு உணராமல்,

லதாவோடு கடலை போட்டு காலத்தைக் கழிக்கும் அப்பாவி கோபால் போல நானும் ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜியோடு  ஜாலியாக இருந்தேன்.

2009062650331601_959779e

ஆனா விதி PUBLIC EXAMINATIONS ரூபத்தில் வந்தது.
அப்போ கூட இது (MATHS EXAM) ஒரு சதி வலைனு தெரியாம சிக்கிக்கும் அப்பாவி கோபால் போல நானும் எழுதிட்டு வந்துட்டேன்.

எப்படி அந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு ரயிலைப் பார்த்தால் கோபாலுக்கு உடல் வியர்த்து மனம் பதைத்து இரத்தம் கொதித்து ஒரு மாதிரி ஆகுமோ அதேபோல அந்த சம்பவத்துக்குப் (PUBLIC EXAM) பிறகு யாராவது என்கிட்ட ப்ளஸ்டூ மார்க் பற்றிப் பேசும் போது எனக்கும் ஆகும்.

0

நாட்கள் நகர்ந்தன…  அந்த நாளும் (RESULT) வந்தது.download

அப்பாவி கோபாலுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி !!

அவன் நம்பியது போல லதா உண்மையில் அவன் காதலி இல்லை ஒரு போலிஸ் ஸ்பெஷல் ஏஜெண்டு

எனத் தெரிந்துகொண்ட கணத்தில் அப்பாவி கோபாலுக்கு ஏற்பட்ட அதே பேரதிர்ச்சி

MATHS மார்க்கைப் பார்த்த எனக்கு!!

கிளைமாக்ஸ்ல்…

“லதா? உன்னை எவ்வளவு நம்பினேனே!
நீ கூடவா? என்னை ஏமாற்றினாய்?”

எனக் கண்களில் பெருகும் கண்ணீருடன் கேட்கும் அப்பாவி கோபால் போல் என் கணித மார்க்கைப் பார்த்துக்கொண்டு நின்றேன் !!

download (1)

“அப்போ இத்தனை நாள் என்னுடன் பேசியது, பழகியது,
ஆடிப்பாடியது அத்தனையும் நடிப்பா? 
சொல்லு லதா!! அத்தனையும் நடிப்பா?” 

எனக் கேட்கும் அப்பாவி கோபால் போல்…

நான் இத்தனை நாள் WORK OUT  செய்யும் போதெல்லாம் 

மிக ஈஸிஆக SOLVE  ஆகிவிட்டு
நான் இன்னொரு இராமானுஜம் ஆவேன்கிற ரேஞ்சுக்கு என் மனதில் ஆசைக் கோட்டை கட்டச் செய்துவிட்டு

இன்று??? இன்று ?? நீ கூடவா MATHS? ஐயோ!

 10451695_702126966551927_4386638169180797748_n

(P.S: மன்னிக்கவும்… கோபால் போல என்னால் அன்று மூக்கு சிந்த முடியவில்லை… RESULT  எப்பவும் SUMMERல் தான் வரும் WINTERல் இல்லை என்பதால் சளி பிடிக்க வில்லை. ஆனாலும்…)

“இல்லை… கோப்பால்…. இல்லை… இல்லை…”  ன்னு ஏகத்துக்கு ஃப்பீல் பண்ணிட்டு …  கடைசியில்  “ஆமாம் கோபால்”  னு ஆப்பு வைத்து,

hqdefault (1)

WHITE SAREE அழுக்காகுமேன்னு கூட பார்க்காமல் மொசைக் தரையில் புரண்டு,

“லட்ச லட்சமா” செலவு செய்து போட்ட “மேக்கப்” கலைந்துவிடுமேன்னு கூடப் பார்க்காம கண்ணீர் விட்டு

“இனி நீங்க எப்போ வந்தாலும் சரி, எப்படி வந்தாலும் சரி

நான் காத்துக்கொண்டிருப்பேன் கோபால்…
காத்துக்கொண்டிருப்பேன் கோபால்…. “

ன்னு சும்மா உள்ளுள்ளாயிக்காக அழும் “லதா” போன்று தான் தெரிந்தது MATHS அன்று எனக்கு!!

hqdefault (2)

அப்போது என் உள்ளத்தில் ஏற்பட்டது உறுதி…

“வாலிபமே நீ வாழ்க… போய் வருகிறேன் !!”
ன்னு சொல்லிட்டு ஃப்பீலிங்கோட பியானோ வாசித்து விட்டு கிளம்பும் கோபால் போல

maxresdefault (1)

நானும் ஃப்பீல் பண்ணி இன்ஜினியரிங் சீட் எனும் கனவை உடைத்தெறிந்து அக்ரி படிக்கக் கிளம்பினேன்…

அங்கேயும் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது…

அக்ரியில் கூட MATHS COURSE ….

“பழைய பறவை… போல ஒன்று… பறந்து வந்ததே” 

imageds

எனக்குள் சிறிது காலம் அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்த
“அப்பாவி கோபால்”  திடுமென விழித்தெழுந்தான்…

maxresdefault