Wrote in 2007… Inspired by Kalki’s flamboyant and  fantastic writing in tamil… 


Kundavai

Part 2 

Part  2

குந்தவை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல்
மிகுந்த அறிவாளி தான்… சிறந்த பொறுமையும், முற்போக்கு சிந்தனைகளும், சோழ ராஜ்யத்தை செழிப்படைய செய்வதே பிறவிப்பயன் என கொண்டவள் தான்… ஆனால்  விதி  யாரை  விட்டது … எந்த  நொடியில்  அவள்  வந்தியத்தேவனைச்சந்தித்தாளோ குடந்தை  ஜோதிடர்  வீட்டில்… அப்போது  தான்  அவள்  “பெண்மை”  பூத்ததை அவளே அறிகிறாள். வியப்பால்  அகன்று  விரிந்த  தன்  பெரிய  கண்களால் அப்படியே  வந்தியதேவனை விழுங்கி  விடுவதுபோல் பார்க்கிறாள் … அவனது களை ததும்பும் திருமுகத்தைக்கண்டதும்  தன்னையே இழக்கிறாள் … தன்னையும்  அறியாமல்  மெல்லிய  இளம்  காதல்  துளிர்  விடுவதை  உணர்கிறாள் …

ஆனால்  ஏதோ  ஒன்று  தடுக்கிறதே ? அது  என்ன ?… பாராளும்  மன்னன்  மகள் தான், அவனோ  ஒரு  வழிப்போக்கன்  அவ்வளவே … தங்கள் காதல் பொருத்தமானதா என்று  மனதுக்கும் , புத்திக்கும்  ஒரு  பெரும்  போராட்டம் அவளுக்குள்  தொடங்குகிறது …. சுந்தர சோழன், மந்தாகினி தேவி கதை அவள் அறியாததா??

ஆனாலும்  மனமே  வெல்கிறது … தன்னுடைய  நிலையில்  இருந்து  அவள்  ஒரு போதும்  இறங்கி  வர  இயலாது … தனக்கு  இருக்கும்  பொறுப்புகளை அவள் தட்டிக்கழிக்க முடியாது … எல்லா  சாதாரண  பெண்களையும் போல காதலனே  உலகம்…  என்று  அவனை  நினைப்பதையே  முழு  நேர  தொழிலாக (வானதி, மணிமேகலை மற்றும் பூங்குழலி போல்) அவள்  செய்ய  முடியாது … அதனால்  அவள்  காதலை  மறைத்து  வைக்க  முயல்கிறாள் … அதில்  ஓரளவு வெற்றியும்  பெறுகிறாள் … காதல்  வயப்பட்ட  தன்  மனதை  வந்தியத்தேவனிடம் பெரும்பாலும்  அவள்  வெளிக்காட்டிக்கொள்வதில்லை … ஆனால் , சரியான தருணங்களில் , அதை  அவள்  வெளியிட  தயங்கவும்  இல்லை … (சிறைச்சாலையில் , பொன்னியின் செல்வனுக்கு ஓலை  கொடுத்து  அனுப்பும்   போது , சின்னப்பழுவேட்டரயரை  தேடிச்சென்று திரும்பி வந்து  வந்தியத்தேவன் அவளை பார்க்கும்போது … )

தான்  சோழ  நாட்டிலேயே  இருக்க  வேண்டும்  என்பதற்காக  அவள்  வந்தியத்தேவனைப்போல்  ஒரு அனாதையைக்காதலிக்கவில்லை … அவன்  தனக்கு  அடிமை  போல்  இருப்பான் என்று எண்ணியும் அவனை  மணம்  செய்து  கொள்ள  விரும்பவில்லை … அவ்வளவு  சுயநலம் பிடித்தவளும் இல்லை  அவள் … ஆனால்  சோழ  நாட்டின்  மீது  கொண்ட  அன்பால்  அவள் கட்டுண்டு  கிடந்தாள் … அது  அவளே  அவளுக்கு  இட்டுக்கொண்ட பாச விலங்கு …

பெரிதாக பிரஸ்தாபித்தால்தான்  காதல்  உயர்ந்ததா  என்ன? அவர்கள்  பேசிக்கொள்ளத்தேவை  இல்லை … இது  இரு  ஜோடி  கண்களின்  மௌன  கீதம் … ஒரே  எண்ணம்  உடைய  இரு  மனங்களினின்று  எழும் இனிய  ராகம் … அவர்களின்  மனங்கள் இணைந்து விட்டதை  அவர்கள்  இருவருமே  நன்கு  அறிவார்கள் … இது ஒரு மென்மையான, மேன்மையான காதல் ….

————————–