12341604_821895507932826_4662404233096450374_n

 

அண்ணன் அமாவாசை தன்னுடைய விஸ்தாரமான வீட்டில், ஒய்யாரமாக சாய்ந்து உட்கார்ந்து அன்றைய நியூஸ் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருக்கிறார். மணியன் என்கிற மணிமாறன் (மாண்புமிகு) மேல் மூச்சு கீழ் வாங்க, பரபரப்பாக, ஓடோடி வருகிறார்.

 

அண்ணன் அமாவாசை: டே மணியா!! என்றாது?  அட என்னத்துக்கு இப்படி ஓடியார? ஆட்சிய கீட்சிய கலச்சிப்புட்டாங்களாடா? அட எதோ நம்பர் சொல்வாங்களே 356 ஆ? 456 ஆ? ஆட்சிக்கலைப்பு. அதுவாடா?  அட!! என்னன்னு சொல்லித் தொலைடா?

 

மணி: …ண்ணா! நியூஸ் கேட்டீங்ளாங்? மள வெள்ளத்துனால 200 பேர் பலி, பலத்த சேதம், பொதுமக்கள் கொதிப்புன்னு….

 

அமாவாசை: அடச்சே! இதத்தான் சொல்ல வந்தியாக்க! போடா இவனே… நான் ஏதோ பதவி பறிபோயிடுமோனு பதறிட்டேன். என்றா இப்போ ஆகிப்போச்சு?  யாரு கொதிக்கறாங்கோ?

 

மணி: ண்ணா… பேஸ்புக்கு வாட்சப்பு ன்னு என்னென்ன கருமாந்தரமோ சொல்றாங்கில்லீங்கோ… அதுலங்க்ணா…

 

அ: டேய் மணியா!!  பிசினஸ்  மேனேஜ்மெண்ட்ல  மார்கெட்டிங்  பத்தி படிச்சிருக்கியா நீயி?

 

மணி: நானுங்ளா?  நானெங்ணா படிச்சேன்…  நாலாவது கூட தாண்டலைங்…

ஒருதடவ கல்வித்துறை என்றகிட்டே இருந்தப்போ, நம்ம ஊர்ல ஒரு விழாவுக்கு போயி பேய் மள பெஞ்சு எடமே இல்லாம மாட்டிகிட்டெங்…  அப்போ சித்தங்கூற பக்கத்துல ஒரு இஸ்கூல்ல ஒதுங்கினங்ணா…. மத்தபடி எந்த காலத்துலயும் பள்ளிக்கூடம் பக்கங்கூட போனதில்லீங்ணா…

 

அ: ஆமாமா… அப்போ உன்ற பையன்??

 

மணி: என்ற பையன் அப்படி இல்லீங்ணா… அவன் அமெரிக்காவுல படிக்கிறானல்லோ?.

 

அ: மணியா! மார்க்கெட்டிங்ல டார்கெட் கஸ்டமர் அப்டின்னு சொல்வாங்கோ… ஒன்ற பிசினெஸ்க்குன்னு ஒரு தனி குரூப்பு இருப்பாங்கோ… அவிங்க்ய தான் ஒன்ற   பொருளெல்லாம் வாங்கறவங்கொ… அவிங்க்ய மட்டும் தான் உன்ற நெனப்புல இருக்கோணும்… அவிங்க்ய தான் ஒன்ற வருமானம், வாழ்க்கை எல்லாத்தையும் தீர்மானிக்கிறாங்கோ…

marketing-target-customer-market-success-consumerism-strategy-solution-best-price-vector-illustration-51476455

மணி: அதுக்கும் இதுக்கும் என்னங்ணா சம்பந்தம்…   புரியலைங்ணா…

 

அ: அதாண்டா மணியா தலைவனா இருந்த நீ இப்போ எனக்கே தொண்டனாகிட்ட… நான் தலைவனாகிட்டேன்…

download

மணி: என்னங்ணா சொல்றீங்…? புரியலீங்….

 

அ: டேய் மணியா… நீ சொல்ற   பேஸ்புக்கு வாட்சப்பு  ன்னு எல்லாத்துலயும் எழுதறவன்லாம் நம்ம ‘டார்கெட் கஸ்டமர்’ இல்லன்னு சொல்றேன். அவிங்க பாட்டுக்கு எதாச்சும் சொல்லிகிட்டே தான் இருப்பானுவோ… நீ நம்ம வேலையைப் பாரு…

குடிசைல இருக்காம்பாரு, அவன்தான் நம்ம சனம்… 200 ரூபா, கோட்டரு, கோழி பிரியாணி எல்லாம் வாங்கிகிட்டு நம்மள ஜெயிக்கவக்கிறவங்கோ… அவிங்கள கவனி… மத்தவன எல்லாம் வுட்டுத்தள்ளு…

ஆனா ஒண்ணு குடிசை சனத்துக்கும் நிரந்தரமா ஏதும் செஞ்சிடக் கூடாது…

அவிங்க வறுமையில இருக்கற வரை தான் நமக்கு வாழ்க்கை, வருமானம், வசதி, வளம் எல்லாமே… பாத்துக்கடா… 

மணி: இண்டர்நெட்டெல்லாம் ஒரே கிண்டல் கேலி தாங்ணா… நம்மளப் பத்தி…

 

அ: இன்டர்நெட்ல கத்தறவெனெல்லாம்  LOSS OF PAY ன்னா  ஆபீஸ்  ஓடிடுவானுகோ… அட விடுடா… அதுக்கு மேல என்ன செஞ்சிடுவானுகோ?

images (1)

மணி: இல்லீங்ணா… மானம் போவுது…

 

அ: டேய் மானமெல்லாம் பாத்தா அரசியலுக்கு நீ வந்தே இருக்கக் கூடாதுடா… பிரச்சாரம்னு  போகும்போது பம்மறது, அப்புறம் அதே மக்கள ஏகத்தாளமா பாத்து ஓடறது… மானமா மானம்… அதெல்லாம் இருக்கறவங்க பேசோணும்… நமக்கெங்கேடா அதெல்லாம்…  வெளக்கெண்ண…

 

மணி: …ண்ணா… எல்லாரும் ஏதேதோ கேள்வி கேக்கறாய்ங்க்ணா… நீங்க என்ன பண்ணீங்கோன்னு?

 

அ: யாரு, என்னயவா? உன்னயவா? போடா டேய்… போடா… நேத்து பாத்தியா? எவனோ பத்திரிகைக்கு பேட்டி குடுத்தான்… நான் 5 லட்சம் குடுக்கறேன்னு… அவன் பின்னால, நீ ஏன் 10 லட்சம் குடுக்க கூடாதுன்னு எகத்தாளம் பேசிகிட்டு திரிவானுகோ… இவனுகளாவது  நம்மளயாவது கேள்வி கேக்கறதாவது? இங்க எல்லாம் நம்முளுதுடா… நாம வச்சதுதான் சட்டம்… நாம செய்யறது தான் சரி… அது தான் நாட்டோட தல விதி…

 

மணி: …ண்ணா… இளைஞர்களெல்லாம் ஒண்ணு கூடிட்டாங்கோ, ஏதோ புது சமுதாய எழுச்சி உருவாகுது, ஜாதி மத பேதம் மறஞ்சு போச்சு, எல்லாம் அண்ணன் தம்பி சொந்தக்காரங்க மாதிரி ஆகிட்டாங்கோ… ஒருத்தருக்கொருத்தர் உதவி எல்லாம் பண்றாங்கோ…  நம்ம முன்ன மாதிரி இனிமே ஜாதிப் பேரச் சொல்லி ஓட்டு கேக்க முடியுமாங்ணா…

hqdefault

அ: அட என்றா பயந்து சாகற? என்னமோ இதெல்லாம் புதுசா நடக்கறாப்ல… சுனாமியே வந்து சுருட்டிக்கிட்டு போச்சு… அப்பவும் இதே மாதிரி தான் ஓலமிட்டானுவோ… சமுதாயப் புரட்சி அது இதுன்னு, போடா டேய்… மழை காஞ்சு மக்கள் வாங்கற மொத சர்டிபிகேட்டே என்னவா இருக்கும் தெரியுமா?

 

மணி: என்னதுங்ணா…

 

அ:    “ஜாதிச் சான்றிதழ்” 

 

images

மணி: ண்ணா… அப்டீங்களா?

 

அ: அப்புறமென்ன? புள்ளைங்கள டாக்டரு, கம்ப்யூட்டர் இஞ்சினீயர் ன்னு ஆக்க வேணாமா?  அதுக்குத்தான அதுக பொறப்பே எடுத்துருக்குனு நம்ம ஆளுங்க நம்பறாய்ங்கல்லோ?  ஏண்டா கவலப்படுற? விட்றா…

 

மணி: அதென்னவோ சர்தானுங்ணா… என்ற தங்கச்சி பொண்ணு கூட என்ற பொண்ணுகிட்ட எதோ சாப்டுவறேன்டி சைடுல னு எதோ சொல்லிச்சுங்ணா …

 

அ: அட மடையா: அது சாப்டுவேர் டிசைன்”  டா…

 

மணி: அட அந்த எழவெல்லாம் நமக்கென்னங்ணா தெரியும்…  ண்ணா… வெள்ளத்துல லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசலெல்லாம் போயி நடுத்தெருவுல நிக்கறாங்கண்ணா!

 

அ: ஆமாடா!! அதுக்கு என்றா இப்ப?

 

மணி: உங்க பங்களா – ரெண்டு மூணு இருக்குல்லங்ணா… கொஞ்சம் தெறந்து விட்டா மழை நிக்கற வரைக்குமாவது மக்கள் தங்கிக்குவாங்கல்லோ?

 

அ: என்றா சொல்லிபோட்ட நீயி? நாசமத்துப் போவ…  இவிங்கள உள்ள வுட்டா என்ற பாரின் நாயி ஜிம்மியும், அதோட சம்சாரம், கொளந்த குட்டியெல்லாம் எங்கேடா போகும்?

 

மணி: ண்ணா… அட இன்னும் ரெண்டு பங்களா இருக்குங்களே… சும்மாவே பூட்டியே… அதுல…

 

அ: அது எதுக்குன்னு தெரிஞ்சுகிட்டே கேக்கிறியே மடையா…

 

மணி: சரி சரிங்ணா…  அது நம்ம தொழில் பண்ற எடம்… இந்த பஞ்சப் பரதேசிங்க அங்க எப்படி?? சாரிங்ணா…

 

அ: அப்படி பேசிப்பளகு… இன்னும் ஏண்டா தலைய சொறிஞ்சுகிட்டு நிக்கிற?

 

மணி: ண்ணா… ஓட்டு கேட்டு போய் பம்மிகிட்டு நின்னப்போ ஆரத்தி, மாலை எல்லாம் அவிங்க தானுங் செஞ்சாங்…

 

அ: அட கிறுக்கா…  அதெல்லாம் நம்ம ஆளுங்க தான்… செட்டப்பு… உனக்கு நாஞ்சொல்லியா தெரியும்? நீ தானேடா தலைக்கு 50 ரூபா குடுப்போம்… தாய்மார்கள் ஆரத்தி எடுக்க வரவும்ன்னு  மைக்குல நான் வரதுக்கு மொத நாள் முன்னாடி கத்திகிட்டு போன…

 

மணி: அதில்லைங்ணா… நம்ம ஏதாச்சும் உதவி செய்யோணுமில்லைங்… இன்னுஞ்சொல்லப்போனா நாம தானுங் செய்யோணும்… 

 

அ: என்றா, இது புதுசா கெட்டபளக்கம்?  மக்களுக்கு நல்லது செய்யறது அது இதுன்னு? இப்படி பேசினவனல்லாம் இப்போ எங்கிருக்கான் தெரியும்ல? சாக்கரத… மருவாதியா போயிரு…  சொல்லிப் போட்டேன்…

 

மணி: மக்களெல்லாம் சாப்பாடு, தண்ணி, துணிமணி, மருந்து, எல்லாத்துக்கும் கையேந்தி நிக்கறாங்கோ…

chennai-flood-5-wb

அ: நம்ம கிட்ட ஓட்டுக்கு இவ்வளவுன்னு கை நீட்டி வாங்கினாய்ங்கல்லோ… அப்போ அப்படி கையேந்தினதாலதண்டா மணியா… இப்போ இப்படி கையேந்தற நெலம அவனுகளுக்கு… அதாண்டா நம்ம பலம்… தந்திரம், மந்திரம் எல்லாமே…

 

மணி: …ண்ணா… ரோடு எல்லாம் உள்வாங்கி வண்டி எல்லாம் சிக்கிக்கிட்டு மக்கள் ரொம்ப கஷ்டப் படுறாங்க… அதான்…

 

அ: அதனால? உன் மச்சானுக்கு தான எக்கச்செக்க ரோடு காண்ட்ராக்ட்டு குடுக்கச் சொல்லி கேட்ட… இப்போ என்னமோ நல்லவன் மாதிரி பம்முற?

crater main

மணி: ண்ணா… அது வந்துங்…

 

அ:  என்றா வந்து? போயி? ஒழுங்கா நிவாரணங்ற பேர்ல கட்சிக்கு நிதி தெரட்டற வழியப் பாரு… இன்னும் சில மாசத்துல தேர்தல் வருது தெரியும்ல?

 

மணி: அட அது சரிங்ணா… ஆனாலும், இப்போ நெலம ரொம்ப மோசமா இருக்கு…

 

அ: அதுக்கு நாம என்றா செய்ய முடியும்?

 

மணி: சரிங்… அப்புறம் நாம எதுனா நிதி குடுக்க…

 

அ: என்னாது? எவன் சொத்த எவனுக்குடா குடுக்க கேக்கற?

 

மணி: …ண்ணா… கட்சி நிதிலேந்து… 

 

அ: அதத் தாண்டா சொல்றேன்… வெளங்கலையா? வெண்ண… 

 

மணி: வெளங்கிடிச்சிங்ணா… நல்லா.. வெளங்கிடிச்சிங்ணா… இனிமே நல்லாவே வெளங்கிடும்ணா… 

 

அ: அப்புறமென்னத்த என்ற வாய பாத்துக்கிட்டு நிக்கிற? எத்தினி கேசு பெண்டிங்ல இருக்கு… மள வெள்ளம்னு சிபிஐ காரன் லீவு விடுறானா?  போ… போய் வேலைய பாரு…

 

மணி: சரீங்ணா… இதெல்லாம் இருக்கயில வர்ற தேர்தல்ல நாம ஜெயிப்போமாங்ணா…

 

அ: டேய் மணியா!! போறதுக்கு முன்னாடி ஒரு அரசியல் அரிச்சுவடி, ஆரம்பப்பாடம் சொல்றேன்… நல்லா கேட்டுக்க… மக்களுக்கு  “மறதி”  ன்னு ஒண்ணு இருக்கு… மள காஞ்சு நாலு நாள் வெயில் அடிச்சா, மொத்தத்தையும் மறந்துட்டு சரக்கடிக்கப் போயி நிப்பானுவோ… நமக்கு இதுனால என்ன பாதிப்பு?

 

மணி: மறதியா? 

images (2)

அ: ஆமாம்டா… இல்லன்னா நாமளும் ‘அவங்களும்’, அதாண்டா சபையில எதுத்தாபோல உக்காருவாய்ங்களே !! இத்தன வருசமா இவிங்கள எப்படிடா ஆள முடியும்? நாளைக்கே கண்ணீரும், கம்பலையுமா நாம போஸ் குடுத்து பேப்பர்ல போட்டோ போட்டு அதப் பாத்தாய்ங்கன்னா நமக்கு ஓட்டு போட்டுடுவானுகோ… ஏண்டா பயப்படற?  எனக்கு ஒருக்கா அளுதீங்கல்லோ  அதுமாதிரி மறுக்கா அளுகோணும்…

 

மணி: அதில்லீங்ணா… NOTA  NOTA ன்னு…

 

அ: அத வச்சு? என்றா பண்ண சொல்ற? அப்படியே எல்லாரும் அத செலக்ட் பண்ணாலும், திரும்ப தேர்தல் வரும். திரும்ப நாம தானே டா நிப்போம்… நல்லவனுங்க எவனையாவது நிக்க விடுவோமா? மாட்டோம்ல…

சாய்ஸு… சாய்ஸு… மக்களுக்கு வேற சாய்ஸே (Choice) இல்லடா மணியா… 

images

மணி: புரிஞ்சி போச்சுங்ணா வர்றனுங்… போயி உங்க நாய்க்கு பாரின் பிஸ்கட் வாங்கோணும்னா… அதத் தவிர வெற எதையும் சாப்டாதுங்ணா…

 

அ: பாத்துடா மணியா…. மக்களுக்கு செய்யற சாப்பாட குடுத்து போடாத… என்ற நாயி  செத்து கித்து போச்சுனா அப்புறம்… சாக்கிரத… சொல்லிப் போட்டேன்…

 

மணி: ..வர்றனுங்…  யப்பா… என்ன ஒரு அரசியல் ராஜதந்திரிய்யா இவன்… 

———————————————