மனம் ஒரு குரங்கு – ஏன் குரங்கு?

Read it also here

http://wp.me/p5gvcj-gq

mm_final_logo-081

பொதுவாக மனித மனத்தைப் பற்றி பெரியோர்கள் பேசும் போது ஒருகணமும் பொறுமையாக இருக்க இயலாதது, எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது, தேவையில்லாத பல காரியங்கள் செய்வது எனப் பொருள் பட அதைக் குரங்குக்கு ஒப்பிடுவர். சிங்கம், புலி, கரடி அல்லது மான், மீன் எனப் பல்வேறு விலங்குகள் உலகில் இருக்கையில் ஏன் குறிப்பாக குரங்கு என்று மட்டும் கூறவேண்டும்? நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில், சிங்கம், குரங்கு இரண்டுக்கும் தனிச்சிறப்பு  உண்டு என்றே கூறலாம். பரந்தாமனே நரசிம்மனாக உருவெடுத்து வந்ததால் சிஙகத்துக்கும், பின் அவன் (இராமனின்) அடியவனாக ஹனுமான் வடிவெடுத்ததால் குரங்கினத்துக்கும் தனிப் பெருமை உண்டானது என்று சொன்னால் அது மிகையன்று.

ஆனால், எவ்விதம் பல அழுக்குகள், சபலங்கள், இந்திரிய வழி அலைக்கழிப்புகள் உடைய சராசரி மனித மனத்தை மஹா பக்த, வானர ஷ்ரேஷ்ட ஹனுமான் போன்ற பரம பக்திமானுடன் ஒப்பிடலாம் எனக் கேள்வி எழலாம். எனவே ,அவர் வரலாற்றைச் சற்று ஆராய்வோம்..

images (1)

பிறக்கும் போதே தெய்வ கடாக்ஷம் பெற்றவர் ஹனுமான். அதே போல நாமும் மனிதப் பிறவி எடுப்பதே தெய்வ கடாக்ஷத்தினால் (மாதவத்தினால்) தான் என உணரவேண்டும். பின்னரும் நம் மனம், குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது போல, கல்மிஷங்கள் இல்லாது தான் இருக்கிறது. ஹனுமான் தன் பிறவிக்கே உரிய குணஙகளோடு வளர்ந்த்து போல, நாமும் நம் சூழ்நிலைகளுக்கேற்ப வளர்கிறோம்.

ஒரு நாள் அவர் சூரியனை பழம் என எண்ணிப் பிடிக்கப் பாய்ந்தார். அத்தவறுக்காக இந்திரனால் தாக்கப்பட்டு, தாடை வீங்கி, பின் ஞானம் பெற்று, ஸுர்யதேவனிடம் கல்வி கற்று, நவவியாக்கிரண பண்டிதர் எனப் புகழ் பெற்றார். அதே போல நாமும் மன அறியாமையால் பலப்பல காரியங்களை அவற்றின் பின் விளைவுகளை எண்ணாது செய்துவிட்டுப் பின் அதன் பலன்களை அனுபவிக்கிறோம். அவற்றினின்று அனுபவப்பாடம் கற்கிறோம். பின்னர், ஹனுமான் தான் பெற்ற வரத்தால் கர்வம் கொண்டு சில முரணான காரியங்களைச் செய்து ரிஷிகளிடம் “உன் சக்தி உனக்கு மறந்து போகக்கடவது” எனச் சாபம் பெற்றார். ஆனால், தக்க சமயத்தில்  யாரேனும் ஒருவரால் ஊக்குவிக்கப்படும் போது அது வெளிப்படும் என்று  அறிவுரையும் பெற்றார். நம் மனமும் அகந்தையெனும் மாய வலையில் சிக்கினால் தகாத காரியங்கள் பல செய்யக்கூடும். பின் தக்க நேரத்தில் சரியான அறிவுரை கிட்டும் போது, நல்வழிக்குத் திரும்ப விழையும். அவ்வாறு திரும்பிய (திருந்திய) மனம் , வாயுபுத்திரன் போல அசாத்திய பலம் கொண்டுவிளங்கும். தானே?

images

பலம் பெற்ற ஹனுமான் பின் தனக்குரிய ஒரு நல்ல தலைவனைத் தேடிச்செல்கிறார். சுக்ரீவனை அடைந்து அவனுக்குத் தொண்டு செய்கிறார்.  பின் காட்டில் இராமனைக் கண்டு பரம்பொருள் என உணர்ந்து அவனுக்கே அடிமையென்றாகி, அவன் அன்புக்குப் பாத்திரமாகி “ராமப்ரியதாசன்” என்ற பெரும் பெயர் பெறுகிறார். அதே போல திருந்தி நல்வழி காட்டப்பட்ட மனம் பெரியோர்களின் சகவாசம் நாடிச் செல்லும். பின்னர் ஹனுமான் அளவிலா ஆற்றல் கொண்டு கடலைக் கடந்து, அன்னையிடம் சூடாமணியைக் கொடுத்துப் பின் மீண்டு வந்து, “கண்டேன் சீதையை” எனக்கூறி, பரிசாக இராமனின் “திவ்ய சரீர ஆலிங்கனம்” என்னும் மோக்ஷத்தைக்காட்டிலும் பெரிய பெறற்கரிய பேற்றைப் பெறுகிறார். ஆச்சார்யனே கதி என மனம் உணர்ந்து அவரிடம் பூரண சரணாகதி அடையும் போது நாமும் பாகவத கைங்கர்யபரர்களாகிறோம். அதனால் முமுக்ஷுகளாகி சம்சார சாகரத்தைக் கடக்கும் ஆற்றல் பெற்றுப் பின் பகவானுக்கு பிரியர்களாகி அவன் திருவடிகளை அடைந்து முக்தியை ஜீவாத்மா பெறுகிறது.

rama anjaneya aalinganam

இவ்வாறு, சராசரி மனித மனம் குரங்கு என்று விளிக்கப்பட்டாலும், சரியான வழிகாட்டுதல், ஆச்சார்ய பக்தி, மற்றும் பாகவத கைங்கர்ய அர்ப்பணிப்பு ஆகியவை வாய்க்கப்பெற்றால், குரங்காகப் பிறந்தும் இப்பூவுலகில் சிரஞ்சீவியாக அழியாப் புகழ் பெற்ற ஹனுமான் எனும் புனிதனைப் போன்ற உயர்ந்த நிலையை அடைய எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளன என்பது தெளிவாகிறதல்லவா?

எனவே பெரியோர் “மனம் ஒரு குரங்கு” என்று கூறியது முற்றிலும் பொருத்தமானது தானே?

—————————————-

ஆசார்யன் திருவடிகளே சரணம் !!

 —————————————-

Why human mind is compared to a monkey?

images

Whenever the learned and respected elders mention about the human mind, they compare it with a monkey perhaps due to many similarities in their very nature of being restless, changing constantly and doing unnecessary things. However, there could be a profound but hidden meaning behind that expression. It may refer to the innate potential that human mind has to transform itself from an ordinary monkey to attain the level of immortal (Chiranjeevi) sarvaguna sampoornan – Hanuman.

Hanuman is the immortal personification of strength, courage, humility, perseverance, knowledge and divinely sacrifice. All in one. 

One may wonder how an ordinary human mind, with its filthy, dirty, and sinful thinking and deeds, deserves to be compared to the vaanara shreshta, maha bhaktha Hanuman. So let us look at the life of Hanuman to understand this better.

images (1)

Hanuman was born with God’s absolute divine blessings. So are we, in this world, to have this janma (birth) as humans with sixth sense to steer ourselves towards eternal bliss. Thus goes the saying ‘God lives in the pure minds of the children”. Just how Hanuman grew up with the traits usual for his monkey incarnation, we also think and act and get our beliefs shaped according to our environments. When Hanuman mistook the Sun for a giant fruit out of ignorance when he was a toddler, he tries to swallow it. He gets punished by Indra and was shot down. Similarly, we do many things in our lives out of ignorance and pay the price for our deeds.

Then Hanuman gets blessed by all the demi gods, who give him extraordinary powers. With these powers, Hanuman then goes a little berserk and disturbs the saints who then curse him that he will forget about his true strength. But upon apologizing, the sages offer some relief that if someone reminds him about his true potential, he could scale heights that no one can ever imagine.

mm_final_logo-081

The human mind also thinks that it is superior and can do everything in the world independently without any need for the Lord, forgetting that everything in the world is His creation and act as He wishes. On occasions when we do something wrong, we do get cursed and punished and when we realize them, the mind gets back to the path of redemption. Such a redeemed mind becomes the abode of God and can do anything with Him residing inside.

Having gained all the knowledge from his guru, the Sun God, Hanuman goes in search of a good leader; finds Sugreeva and starts assisting him in all the possible ways. One day, he meets Sri Rama in the jungle and realizes He is indeed the human incarnation of the Paramathma. Then he completely surrenders unto Him as His ardent devotee, servant, assistant and everything thus personifying himself as ‘RamaPriya Dasa’ (the servant who is loved by the Lord the most among all His devotees). Then he sets out to cross the ocean; meets mother Sita; comes back and makes Rama happy and gets the ultimate reward – His aalinganam (a hug from Rama), which is in truth, greater than attaining moksha. And thusHanuman remains in this world as Chinranjeevi (the one who conquered death).

rama anjaneya aalinganam

For the redeemed mind to further its journey towards moksha, it needs to get acquainted with good souls with magnanimous and benevolent intention towards the whole world (Sarve Jana Sukino Bhavanthu). By surrendering unto our beloved Acharyan, the mind can realize who God really is and gets progressed to the next level. Through our good deeds and kainkaryam to Acharyan and other respected Sri Vaishnava bhagavathas, the mind of the jeevathma, which is as restless as a monkey, can finally attain eternal bliss at His golden feet conquering the karmic cycles of birth and death.

Thus, we can understand the hidden meaning behind the expression symbolizing human mind as a monkey, which can and has the potential to transform into a peerless devotee like Hanuman.

———————————————————