80s ல பொறந்தவங்களுக்கே பாதி பேருக்கு மேல பழைய படம்னா ஒரு கிலி உண்டாகும். பக்கம் பக்கமா செந்தமிழ் வசனம், செண்டிமெண்ட் ஓவர்லோட், அழுகை, குடும்பக் கதை, etc etc  ன்னு நமக்கு செட் ஆகாதுப்பான்னு சொல்லுவாங்க.

அதே 90s க்கு அப்புறம் பொறந்த பசங்கன்னா “இதுக்கு கெமிஸ்ட்ரி கிளாசே பரவால்ல”  ன்னு  தெறிச்சி ஓடியே போய்டுவாங்க. ஆனா, பழைய படங்கள் எல்லாமே அப்படி இல்ல, 3 மணி நேரம் போறதே தெரியாம யூத்புல்லா, ஜாலியா, சும்மா டைமிங் காமெடியோட சில EXTRAORDINARY ENTERTAINER படங்கள் இருக்குன்னு சொல்றத்துக்கு தான் இந்த பதிவு.

இன்டெர்நெட்ல எங்க பாத்தாலும் புதுப்பட விமர்சனம் கெடைக்கும். ஆனா, என்னிக்குமே நினைவில் நீங்காம இருக்கற சில படங்களப் பத்தி விவரம் இருக்குமான்னா பெரும்பாலும் இல்லை.

அந்த வரிசையில FIRST… நம்ம மக்கள் திலகம் MGR நடிச்ச

“அன்பே வா” 

anbe va

“அடப்பாவி ! கவுத்துட்டான்” 

 

இது 2015 ல வந்த எதோ ஒரு படத்துல வந்த ஒரு யங் ஹீரோவோட டயலாக் இல்ல. 1966 ல வந்த “அன்பே வா” ல MGR பேசினது. Typical  பழைய படம் மாதிரி அய்யகோ, பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி என்னை ஏமாற்றிவிட்டானே, கிராதகன்” ன்னெல்லாம் AVM Rajan (படமே ஏவிஎம் ப்ரொடக்ஷன் தானே…)  எபக்டு குடுக்காம, சும்மா பஞ்ச் பாலா மாதிரி தலைவர் பேசின இந்த ஒரு டயலாக்லேந்தே புரியும் அந்த படம் எவ்ளோ யூத்புல்லா இருக்கும்னு.

 

அந்த காலத்துல தமிழ் வசனங்களுக்காகவே ஓடின படங்கள் தான் ஜாஸ்தி. அதஎல்லாம் பாத்துட்டு இந்த ஜெனரேஷன் பசங்க “ஏம்பாவீட்டுக்குள்ளயே செந்தமிழ்ல தான் பேசுவாங்களா?” ன்னு கேப்பாங்க. ஆனா, அந்த (60s) ஜெனரேஷன்ல இது முற்றிலும் வித்தியாசமான படம்னு காட்ட இந்த ஒரு வசனம் போதும்.

 

படத்தோட கதை எல்லாருக்கும் தெரிஞ்சது தான். COME SEPTEMBER ங்கற ஹாலிவுட் படத்தோட அடிப்படையில் AC திருலோகச்சந்தர் அவர்கள் திரைக்கதை, டைரக்ஷனில் வந்தது. சொல்லப்போனா அந்த பீரியட்களில் இந்த கதையை படமாக்கத் துணிந்த ACT, பலவித GENRE களில் வல்லவர்னு காட்ட இது ஒரு நல்ல உதாரணம்.

 

அதே போல, அதுவரை ஆக்ஷன் ஆதர்ஸ ஹீரோவாவே நடிச்ச நம்ம மக்கள் திலகமும் காமெடியில வூடு கட்டி கலக்குவார்னு காட்டினதும் இந்த படம் தான். சும்மா சொல்லக்கூடாது, செம்ம கேஷுவலா; READERS DIGEST படிக்கற; GOLF விளையாடும் மல்டி மில்லியனரா செம்ம கலக்கல். அதுவும் குளிச்சிட்டு வந்து ஹீரோயின கலாய்க்கற ஸீன்… ஹா ஹா… டாப் கிளாஸ். இன்னோரூ ஸீன்ல காலேஜ் பஸ் டிரைவருக்கு பணம் குடுத்து அவன வயத்து வலின்னு சொல்லச் சொல்லிடுவாரு. அதுக்கு முன்னாடி, “டிரைவாஆஅர்” னு சும்மா வாய சொழட்டி நக்கலா கூப்டுவாரு பாருங்க… யப்பா… செம்ம மாஸ்….

 

அபிநய சரஸ்வதி (அவங்கள காலேஜ் ஸ்டூடன்ட்னு நம்பக் கொஞ்சம் நிறையவே கஷ்டமா இருந்தாலும்…) தன் பங்குக்கு கேஷுவலா பண்ணிருப்பாங்க.

 

படத்தோட ஹைலைட் நாகேஷ் & மனோரமா. என்ன டைமிங் ரெண்டு பேருக்கும். அதுவும் நாகேஷ் செம்ம கூலா தலைவர் கிட்ட காசு வாங்கிகிட்டே இருக்கறதும், அதப்பார்த்தும் ஒண்ணும் பண்ண முடியாம ஆச்சி தவிக்கறதும் சொல்லி முடியாது. திரையில் பார்த்து ரசிக்கணும். கேஸட் ப்ளேயர் இருந்த காலத்துல நானும் என் அக்காவும் இந்த வசனம் முழுக்க “கட்டிக்கரும்பே கண்ணம்மா” ல ஆரம்பிச்சு மொத்த வசனத்தையும் ஒப்பிப்போம்.

 

CAMEO வா வர்ற நம்ம (நடமாடும் AHUJA சவுண்ட் சிஸ்டம்) அசோகன், அவர் வேலையக் கரெக்டா அளவா செய்வாரு. மத்த எல்லாருமே அவங்கவங்க கேரக்டர்ல அழகா நடிச்சிருப்பாங்க.

 

ஹீரோ ஹீரோயின்க்கு நடுவுல வர்ற ஈகோ, மோதல், காதல், எல்லாத்தையும் அவ்வளவு டீசண்டா, அழகா, திரைக்கதையில கொண்டுவந்த ACT ஒரு ஜீனியஸ்னு சொல்ல எனக்கு வயசும், அறிவும், அனுபவமும் போதாது. ஆனாலும், ரசிகன்ங்கற முறையில், அவரைக் கண்டிப்பா புகழ்ந்தாக வேண்டும்.

 

சுத்தமா கவனிக்கப்படாத ஆனா REFRESHING ஆன 2 விஷயங்கள் அதாவது பாடல்கள்.

 

1) AL ராகவன் பாடின “ONCE A PAPPA, MET A MAMA – என்ன ஒரு ஸ்டைல் ஆன PRONUNCIATION! யப்பா… வாட்ட பௌட்ட ஹெல்லார்யூ? ன்னு எதோ RAP சிங்கர் மாதிரி பாடிருப்பாரு. அந்தக்கால சுராங்கனி ன்னு சொல்லலாம். கேட்டா எழுந்து டான்ஸ் ஆட வக்கிற மாதிரி செம்ம யூத்தா இருக்கும் அந்த பாட்டு.

 

2) கிளைமாக்ஸ் க்கு முன்னாடி வர்ற Liban Bindey ங்கற ஒரு சிங்கர்  பாடின சோகமான ADIOS, GOODBYE MY FRIEND ங்கற பாட்டு. அந்த மூடுக்கு ஏத்தா மாதிரி அருமையா செட் ஆகி இருக்கும்.

 

இந்த ரெண்டு பாடல்களையும் சேர்த்த MSV அவர்களை மெல்லிசை மன்னர்னு சொல்லலேன்னா எப்படி?

 

ஓகே, மொத்தத்துல பழைய படம்னா கிளிசரின் பாக்டரி தான்னு நெனச்சிட்டிருக்கற யூத்களே, அன்பே வா ஒரு தடவ பாருங்க…

 

——————————————–

 

ஆ… நெக்ஸ்ட் இன் தி லிஸ்ட்… இன்னொரு கலர்புல் காமெடி கலக்கல்….

 

காதலிக்க நேரமில்லை….”