“பார்த்தவுடன் பிடித்துப் போவது” என்பதை கோலிவுட் பாலிவுட்
படங்களில் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய்
வெறுப்பானவ்ர்கள் சங்கத்தில் நானும் ஒரு ஆயுள்மெம்பர்.

 

air-hostess-23398239

 

ஆனால், இன்னிக்கு ஏர்போர்ட்டில் நான் சந்தித்த ஒரு
பெண்ணால் இந்த எண்ணம் தப்புன்னு நல்லா தெரிஞ்சுது.

 

சூர்ய வம்சம், காதல் கவிதை, காதலர் தினம் போன்ற
அற்புதமான (ஆண்டவா!) “அமரகாவியங்களுக்கு” அப்புறம்
நான் பின்னங்கால் பிடரியில் பட தெறிச்சி ஒடற
இன்னொரு விஷயம்  EARLY MORNING FLIGHTS.
எனக்கு ஆகவே ஆகாது. 

 

 

அதிகாலைச் சூரியனை நான் அபூர்வமாகத் தான் பார்ப்பேன்.
எப்படி நம்ம ஊர்ல நேர்மையான அரசியல்வாதிகள் பார்க்க முடியுமோ;
ஆதார் ஃபோட்டோல, எலெக்ஷன் வோட்டர் ஐடி யில
“அப்பாடா! நம்ம திருமுகம் நம்மளது மாதிரியே இருக்கு” ன்னு
ஆச்சரியப்படும்  அதிர்ஷ்டசாலிகளைப் பார்க்க முடியுமோ அது போல.

அழுதுகிட்டே அலாரம் வச்சு எழுந்து பாதி தூக்கத்துலயே பல்விளக்கி
காக்கா குளியல் போட்டு தூக்கத்துலயே நடந்து டாக்ஸி புடிச்சி
ஏர்போர்ட் போயி செக்கின் பண்ணி செக்யூரிட்டி செக் எல்லாம் (அப்பாடா!) முடிச்சி, Food Court  வந்து   ப்ரேக்ஃபாஸ்ட்  ஆர்டர்  பண்ணி, தூங்கி வழிஞ்சுகிட்டே சாப்பிட்டு முடிச்சிட்டாலும்
என் முன்னோர்கள் புண்ணியத்துல சரியான   பிளைட் புடிச்சிடுவேன். அப்பெல்லாம் என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியவே தெரியாது. TRANCE எனப்படும் ஒரு தியான நிலையில்தான் நான் இருப்பேன்.
ஆனா, இன்னிக்கி ஆர்டர் பண்ணிட்டு திரும்பிப்பார்த்தா! வாவ்!

எதிர்பார்க்கவே இல்ல இப்படி ஒரு ஏர்போர்ட் ஏஞ்சலை! GORGEOUS, BEAUTIFUL, STUNNING னு சொல்லிக்கிட்டே போகலாம்.

 

air-hostess-82662

நான் எப்பவுமே வழக்கமா வர்ற எடமாச்சே? எப்படி பார்க்காம விட்டேன்னு
கல்லூரிக் காலங்கள்ல நம்ம சர்வ சாதாரணமா யூஸ் பண்ண நல்ல
நாலு “நல்ல” வார்த்தைகளால என்னை நானே திட்டிக்கிட்டேன்.

 

ஆர்டர் குடுத்துட்டு கிரெடிட் கார்ட் கையெழுத்துப் போட்டுட்டு நிமிர்ந்து பார்த்தா பக்கத்துல ஒருத்தன் எதையோகீழ சிந்திட்டான். அந்த ஏஞ்சல் வந்து பார்த்துட்டு இப்போ சில நிமிஷங்களுக்கு முன்தான் துடைச்சிருப்பான்னாலும் கோவமே படாம சின்னதா தலைய இப்படியும் அப்படியும் ஆட்டி மெல்லிசா சிரிச்சிட்டு திருப்பி துடைக்க ஆரம்பிச்சிடிச்சு. ஆமா, அந்த ரெஸ்டாரன்ட்ல  கிளீனிங் வேலை செய்யற தேவதை (ஏஞ்சல்னா அதான பின்ன?).

என்ன ஒரு அழகு அடடா!

அழகா இருந்தா போதுமா?

அழகான தொடப்பக்கட்டைகள் இந்த உலகத்துல
நெறைய இருக்குதுங்களே? அதுக்கு மேல எவ்வளவு பணிவு,
பொறுமை, கோவமே படாம  எவ்வளவு கனிவான சிரிப்பு.  

 

அழகும், குணமும், அன்பும், பண்பும் இவ்ளோ சரியா ஒரே பொண்ணுல
மிக்ஸ் ஆகுமா? தொகுதி மேம்பாட்டு நிதியை நேர்மையா
செலவு பண்ற MLA வை பாக்கறமாதிரி
அதிசயமா இருக்கேன்னு
நான் ஆச்சரியமா பார்த்தேன்.

அப்போ கையில எதோ Star Wars Entry Card மாதிரி ஒண்ண குடுத்து

“உம்பட சோறு (MARGHERITTA PIZZA வித் EXTRA CHEESE) ரெடின்னாக்க, இந்தா! இதுல கொர் கொர்ருன்னு சத்தம் வரும். அப்போ ஒடியாந்துரு, இப்போ கெளம்பு கெளம்பு”

 

ன்னு தள்ளாத குறையா அனுப்பிட்டானுக. நானும் என் டேபிளுக்கு போய் வெயிட் பண்ணேன்.

 

எவ்வளவு நாசூக்கா ஒவ்வொரு டேபுள்ளையும் நின்னு, சிரிச்சு, பாதி வடை வாயில ஊறிக்கிட்டு இருக்கும் போதே  சட்னி, சாம்பார் கப் எல்லாத்தையும் கிளியர் பண்ணிடற நம்ம ஊர் சர்வர் சுந்தரங்கள் மாதிரி இல்லாமல் எடுக்கலாமா வேண்டாமான்னு பொறுமையா கேட்டு… அடடா! அசந்துட்டேன்.

 

அப்புறம் என் கையில் இருந்த அந்த விநோதப் பொருள் திடீர்னு உறும ஆரம்பிச்சுது. ஏதோ சுஜாதா SCIENCE FICTION நாவல்ல வர்ற  ஹைடெக் சமாச்சாரம் போல. போய் என் “சோத்தை” வாங்கிட்டு வந்து சாப்ட்டு முடிச்சேன்.

ஏஞ்சல் என் டேபிளுக்கு வந்து . “சார்!” ன்னு கூப்பிட்டப்போ மணிவண்ணன் அவ்வை ஷண்முகி ல சொல்ற மாதிரி “எனக்கு வீணை சத்தம் கேட்டுச்சு, நீ வாசிச்சியா?”  ன்னு  கேக்க தோணிச்சு. அதுக்குள்ள பிளேட்ஸ் எடுக்கலாமான்னு கேட்டு எடுத்துக்கிட்டும் போக தயாராகிடுச்சு.

 

எனக்கு படபடன்னு வந்துது. கேக்கலாமா வேணாமானு ஒரே டென்ஷன். ஷங்கர் மகாதேவன் “அந்தக் கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்?” ன்னு கடமையே கண்ணா மனசுல வந்து கேட்டுட்டுப் போனாரு (ரொம்ப முக்கியம் இப்போ?) கடைசியில முப்பத்து முக்கோடி தேவர்கள் மேல பாரத்தைப் போட்டுவிட்டு கேட்டே விட்டேன்.

 

“என் கூட ஒரு போட்டோ, ஓகேவா”?

 

பதிலுக்கு ஒரு மைக்ரோ நொடி மௌனம்.

“செத்தாண்டா சேகரு”ன்னு தான் நெனச்சேன். ஆனா, “என் ஜாதகம் ராஜயோகம்”னு சிவாவோட தில்லுமுல்லு ரஞ்சித் பாடினாரு. சின்னதா ஸ்மைல்.

ஓகே கிரீன் சிக்னல் கெடச்சாச்சு. ஹேய்….  வாவ்! தேங்க்ஸ்னு சொன்னேன்.

என் வாய் கொஞ்சம் திறந்தேதான் எப்போதும் இருக்கும்.  ஆனா இப்போது நிஜமாகவே JAW-DROPPING MOMENT. 

 

உடனே என் iPHONE கேமராவில் பளிச்சென ஒரு மின்னல். அந்த ஸ்மைல். “ஹேவ் எ குட் டே” ன்னு சொல்லிட்டு போச்சு. சரிதான், இப்படித்தான் ஒவ்வொரு நாளும் குட் டே வா இருக்கும்னா யாரு வேண்டாங்கறா? ன்னு நெனச்சிகிட்டே கெளம்பினேன்.

 

இதில்லாம அந்த ஏஞ்சல் இன்னும் நெறைய விஷயங்களை சொல்லாம சொல்லிட்டுப் போச்சு.

 

சரி, இதுவரைக்கும் படிச்ச வர்ணனையிலேந்து பெரும்பாலானோர் மனசுல என்ன ஓடியிருக்கும்னு GUESS பண்றது கமல் படத்தோட கதையையோ அல்லது கட்டப்பா ஏன் பாஹுபலியக் கொன்னாருன்னு கண்டுபுடிக்கற மாதிரியோ பெரிய்ய்ய கஷ்டமில்லை.  இப்படி ஒரு ஏஞ்சல் எப்படி இருக்கும்னு பார்க்கவும் இன்னும் என்னென்ன சொன்னான்னு தெரிஞ்சிக்கவும்  ஆசையா? WAIT !!

 

இந்த ஏஞ்சலுக்கு 18 இல்ல 81 வயது இருக்கும். அழகுன்னா உண்மையில் என்னடான்னு நம்மளை முகத்தில் அடிப்பது போல திருப்பிக் கேட்கும் அந்த ஸ்மைல்? ஒல்லியா நரம்பு தெரியற அந்த கைகளைப் பார்த்தா அப்படித் தான் தோணும்.

 

529459_3800673770225_1788802353_n1

 

அந்த ஒட்டின கன்னங்களில் தன் பேரன் பேத்திகளின் எக்கச்சக்க முத்தங்களை நிரப்பி வச்சிருக்கும் ஏஞ்சல். “இந்த வயசிலும் உழைச்சி சாப்பிடறேன் பாரு’ ன்னு  அவரது தன்னம்பிக்கையை நிமிர்த்திக் காட்டும் சற்றே கூன் விழுந்த முதுகு.

இதுவரை அழகுன்னு நாம எதையெல்லாம் மனசுல நம்பிக்கிட்டிருந்தோமோ அதையெல்லாம் சுக்கு நூறா ஒடைக்கற மாதிரி.

முதுமைங்கறதை ரசிக்கணும் அப்படி ரசிக்கறவங்களுக்கு “பவர் ஸ்டார் படம் கூட பாசமலர் மாதிரிடா” ன்னு சொல்லாம சொன்னங்க.

 

கண்ணுல போடற மை, லிப்ஸ்டிக், மஸ்காரா, கலர் கலரா பொங்கலுக்கு வெள்ளையடிச்ச மாதிரி கண்ட கண்ட க்ரீம்,  காஸ்ட்லி ட்ரஸ், ஃபோன், இதனாலெல்லாம் அழகு வராது வியாதி வேணா வரும்.

 

அதே போல, பிகினி போட்டுட்டு பீச்சுல ஸீரோ சைஸ்ல திரியறவளுங்க, பிரபஞ்ச அழகி, உலக அழகி,  நாட்டு அழகி, அப்புறம் தெருவுக்கு தெரு போட்டி நடத்தி அதுல ஜெயிக்கறவல்லாம் உணமையான அழகி கெடையாது.

அதானே, தமாத்தூண்டு ட்ரஸ்ஸப் போட்டுகினு “நான் ஏழைகளின் முன்னேற்றத்துக்காக உழைப்பேன்” னு சொல்லி குடம் குடமா நீலிக்கண்ணீர் விட்டு அழுதவளுகள்லாம் என்னத்த செஞ்சாங்கன்னு கேக்கலாம். ஆனா முழுசா ட்ரஸ் வாங்கக் காசில்லாம தானோ என்னவோ அவங்களே இப்படித் திரியறாங்க, இருந்தலும் அவங்க நேர்மையும், விசாலாமா “திறந்த மனசும்” எங்களுக்கு ரொம்பப் புடிச்சிருக்குன்னு வாலிப வயோதிக அன்பர்கள் சண்டைக்கு வருவாங்க ஜாக்கிரதை!

 

71-04701r

 

அழகு என்பது இதுக்கெலாம் சம்பந்தப்பட்டதே இல்ல. பண்போட, யார் மனசையும் நோகடிக்காம, அன்போட எல்லார் கிட்டயும் பழகும் உள்ளம் (அகத்தில் அழகு) இருக்கும் எல்லாருமே அற்புத அழகிகள் தான்.

ஆனா இந்தக் காலத்துல அப்படி உள்ளவங்களைப் பார்ப்பது, மணிரத்னம் படத்துல வெளிச்சமான சீன் வர்ற மாதிரி ரொம்ப அபூர்வமாகிட்டுது.

படிச்சா மட்டும் போதும், உலகத்துல எல்லாரும் தனக்கு அடிமைன்னு நெனைக்கறவங்கதான் அதிகம். அப்படித்தான்  பெற்றோரும் சொல்லி வளர்க்கறாங்க.

 

சரிதான்,  “பியூட்டி”ல ஆரம்பிச்சு கடைசியில “பாட்டி”யில வந்து முடிஞ்சிருக்கு இந்த நாட்டி (NAUGHTY) கதை. ஆனா, 2015 ஒட கடைசி நாள்ல, ஸ்கூல் காலெஜ்ல கெடைக்காத இப்படி ஒரு நல்ல பாடத்தைத் தந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆகணும். !!

 

ஏர்போர்ட் ஏஞ்சல் பாட்டிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!

 

IMG_7039[1]

 

Advertisements