punch

பொதுவா நக்கல், நையாண்டி, உடனுக்குடன் கவுன்ட்டர் (counter) குடுக்கற திறமை இதெல்லாம் பிறப்பிலேயே வர்றதுன்னு நம்பறவன் நான். ஏன்னா, எதிர்பாராத சமயத்துல எதிர்பாராத மாதிரி கமெண்ட்ஸ் அடிச்சுட்டு தான் சிரிக்காம, மத்தவங்கள வயிறு வெடிக்கற அளவு சிரிக்கவைக்கணும்னா, அந்த மாதிரி தெறமையெல்லாம் யாரும் கத்துக்குடுத்து வர முடியாது. அதுக்கு வாய்ப்பே இல்லை. அதுபோல ஒரு பஞ்ச் பாலாக்கள் பல குடும்பங்கள்ல இருப்பாங்க.

எனக்குத் தெரிஞ்சவர் அப்படி ஒருத்தர் இருக்காரு. அவருடனான சில நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்”   மொமெண்ட்ஸ்கள் சில இங்கே

முன்குறிப்பு: இந்த சீரீஸ்ல பஞ்ச்களின் உண்மையான ருசியை அனுபவிக்க அந்தந்த சிச்சுவேஷன்களில் இருந்த கேரக்டர்களின் அறிமுகம் ரொம்ப அவசியம். அதே போல… பஞ்ச பாலாவோட கமெண்ட் ஒன்லி ஒன் லைன் தான் இருக்கும். அதுக்குத் தான் இவ்ளோ பில்டப் குடுக்கறது. அதெல்லாம் படிச்சாத் தான் ரியல் என்ஜாய்மென்ட். அந்த ஒன்லைன மிஸ் பண்ணிட்டீங்கன்னா நான் பொறுப்பில்ல…

ஆனா, கடைசில ஒரு முறை கேள்வியையும், பஞ்ச் பாலாவோட பதிலையும் மட்டும் திரும்ப படிச்சி பார்த்துட்டு சிரிப்பு பொங்கிட்டு வரலைன்னா சொல்லுங்க! எனக்குத் தெரிஞ்ச சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் ரெடியா இருக்கும்… 

ஓகே: என்ஜாய்! ஜமாய்! என்ஜமாய்!!

———————————————————-

# 1. தட் டேய்… உனக்கு இது தேவையா? போயி வேலையப்பாருடா…” மொமென்ட் 

இடம்: வீட்டுத் திண்ணை… குட்டிப்பசங்க ஒன் பவுன்ஸ் கிரிக்கெட் விளையாடும் அளவு பெரிய…

காலம்: தப்பித்தவறிக் கூட சொந்தக்காரங்க எவனாவது வந்துருவானோன்னு வீட்டுக்கு முன்னால திப்பு சுல்தான் கோட்டை மாதிரி பெரிய்ய்ய்ய இரும்பு கேட் போடுவது வழக்கமில்லாத எண்பதுகள்…  (மின்வேலி அளவுக்கு இன்னும் போகல… நல்ல வேளை…)

நேரம்: சுமார் காலை 11 மணி. அதாவது நல்லா சாப்டுட்டு வயிறு திம்முனு க்யாரா பரமானந்தமா இருக்கும்போது யாராவது தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ணினா ஜார்ஜ்புஷ் ஒசாமா மேல கொண்ட வெறிய விட கோடி மடங்கு அதிகமா வர்ற நேரம்.

ஆள் #1: எப்போ பார்த்தாலும் லொட லொடன்னு பேசிக்கிட்டே இருக்கற, எதையும் 3-4 தடவை சொல்லிச் சொல்லி பழக்கப் பட்ட, தெருவுல சும்மா போறவங்களக் கூட கூப்பிட்டு  ஏங்க… நீங்களே சொல்லுங்க”  ன்னு Pre-KG பையன் கிட்ட ஐன்ஸ்டீனோட தியரி ஆப் ரெலேடிவிட்டி பத்தி கருத்து சொல்ல சொல்லி கேக்கற மாதிரியான கேரக்டர்…

ஆள் #2: நம்ம பஞ்ச் பாலா… அவுன்ஸ் கணக்குல அளந்து பேசறவர்.

அந்த ஸீன் இதுதான்…

நம்ம பஞ்ச பாலா நல்லா சாப்டுட்டு பாசமலர் பாட்டு (தீவிர சிவாஜி ரசிகர் பா…) ஒண்ண ஹம் பண்ணிக்கிட்டே மலர்ந்தும் மலராத…. தான நன  நான…”  ன்னு வந்து திண்ணைல அக்கடான்னு உக்கார்றாரு.

எதிர்ல இருந்த ஆள் #1 இதை கவனிச்சு, ரொம்ப நேரமா நாமளும் தெருவுல போற சம்பந்தமே இல்லாதவங்களை எல்லாம் கூப்பிட்டு பேசறோமே… இன்னக்கி இவரை வளைச்சிப் போட்டு அடுத்த ஒன் அவர் ஓட்டிடலாம்”   னு பஞ்ச் பாலாவோட கெப்பாகுட்டி தெரியாம மனக்கோட்டை கட்டிகிட்டே கேக்கறாரு…

ஏங்க… மானம் ஒரே மோடம் போட்டாப்பல இருக்குல்ல?
இன்னிக்கி மழை வருமா?” 

இவ்ளோ தாங்க கேட்டாரு…

நம்ம பஞ்ச பாலாவோ, ஹூ இஸ் த டாக் வாய்ஸ்? யார்றா குறுக்க பேசறதுன்னு?” திரும்பி ஒரு செம்ம அலட்சியமா லுக்கு….

(கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல அரசியல்வாதி கிட்டேர்ந்தோ இல்ல உயர் அதிகாரிகள் கிட்டேர்ந்தோ எந்த ரெக்கமண்டேஷனும் இல்லாம போயி முதியோர் பென்ஷனுக்கு மனு குடுக்கற பாவப்பட்ட பெரியவர்களை ஆபீசர்கள் பார்ப்பாங்களே அதுபோல… எத்தனையோ வருஷம் கஷ்டப்பட்டு படிச்சி, எக்ஸாம் இண்டர்வியூ எல்லாம் பாஸ் பண்ணி ட்ரைனிங் எடுத்து நேர்மையா செயல்படணும்னு அரசு அதிகாரிகளா ஆனவங்களை, மக்கள் பிரதிநிதிங்கற ஒரே (இல்லாத) தகுதி மட்டும் இருக்கறவங்க பார்ப்பாங்களே…) 

அந்த மாதிரி ஒரு பார்வை…

அப்புறம் தான் அவரோட ட்ரேட் மார்க் பஞ்ச்:

ஆங்… வந்தா சொல்றேன்…”     

சொல்லிட்டு     மலர்ந்தும் மலராத…. தான நன  நான…”       கண்டினியூ ஆகுது…

அவ்ளோதான்… அப்புறம் அந்த ஆள் #1     “இதற்கு இது பதில் இல்லையே…”    னு இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி    ரேஞ்சுக்கு கொழப்பத்துல அன்னிக்கி முழுக்க யார்கிட்டயும் பேசவே இல்லைன்னு கேள்விப்பட்டோம்…

எத்தனையோ வருஷம் ஆச்சு. ஆனாலும் இன்னி வரை இதுக்கு சமமான பஞ்ச் வேற யார் கிட்டேந்தும் நான் கேட்டதில்லை…

——————————————————

Next punch… தட்  யோவ்… மூடிட்டு ஓட்டுய்யா…”   மொமென்ட்   

(புரியாதவர்கள் ஆண்பாவம்  படத்தில் பாண்டியன் சீதாவைப் பொண்ணு பார்க்க மாட்டு வண்டியில போற  ஸீனை ஒரு தடவை  Youtube  இல் பார்த்துக்கோங்க…)

—————