அட்லி உப்புமா (“தெறி “த்த)

maxresdefault

மீண்டும் உங்களை இந்த “பழைய சமையல்”… ஒ! சாரி… சாரி! திரைவிமர்சனம் நிகழ்ச்சிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. இன்னிக்கு நாம பாக்கப்போற புதிய ஆனா ரொம்பப் பழைய சோறு… சாரி… படம்… ‘அட்லி (“தெறி”த்த) உப்புமா’.
முதலில் தேவையான ஆட்கள் :
  • அப்ப்ரசண்டிகள் – அதாவது 80 களில்  வெளியான எந்த கோலி, பாலி, ஹாலிவுட் படத்தையுமே பார்த்திருக்காத Gen Z+ பசங்க.
  • அவங்களுக்கு லீடர் மாதிரி எந்த பழைய மாவை அரச்சா இப்போ சேல்ஸ் ஆகும்னு நல்லா தெரிஞ்சிருக்கற ஒரு டைரக்டர். இதுக்கு முன்னாடியும்  மௌனராகம் மாதிரியே ஒரு லவ் & மேரேஜ் சப்ஜெக்ட் தானே பண்ணாரு? அவரே தான்.
  • “அடங்கோ! வித்தியாசமா கூவறாண்டா  இவன்… அயம் வெயிட்டிங்” னு சொல்லிட்டு ஒரு
  • என்ன எழவை எடுத்தாலும், பெரிய ஹீரோவை வச்சு எடுக்கணும். இளிச்சவாப் பசங்க அதையும் காசு குடுத்து பாப்பாணுவோ. அப்போத்தான் நாம காசு பாக்க முடியும்னு முடிவோட இருக்கற ஒரு ப்ரொடியூசர் அண்ட் பைனான்சியர்.
  • அரசியலோ / சினிமாவோ பழசை என்னிக்குமே ஞாபகம் வச்சிக்காத ஒரு வாக்காளர் / ரசிகர் கும்பல்.
  • கடைசியா, படிச்சும் வேலை வெட்டி இல்லாம, அப்பன் ஆத்தா, குடும்பம் எல்லாத்தையும் விட்டுட்டு வெட்டித்தனமா, படம் ஏன் ரிலீஸ் ஆகலன்னு தியேட்டர் முன்னாடி மறியல் செஞ்சு போலீஸ்கிட்ட அடிவாங்கற ஒரு அறிவில்லாத எருமை / செம்மறியாட்டு தடித்தாண்டவராயன்கள் கூட்டம்.
இப்போ தேவையான பொருட்கள்:
  • உள்ளூர் பழைய சரக்குகள் (DVDs): சத்ரியன், வெற்றிவிழா, விக்ரம், புலன் விசாரணை, பாட்சா, என்னை அறிந்தால் போன்ற சில இட்லிகள்
  • ஹாலிவுட் அரதப் பழைய சரக்கு: COMMANDO, TRUE LIES போன்ற அர்னால்டின் தேய்ந்து ஓய்ந்த பீட்ஸாக்கள்
  • கொஞ்சம் யூத்தா பாட்டு போடும் ஒரு மியூசிக் டைரக்டர்

செய்முறை:

என்ன பெரிய செய்முறை? அதான் எல்லாம் உருவியாச்சுல்ல?  அப்படியே ஆளுங்க கேரக்டர் மட்டும் மாத்தி, கொஞ்சம் சென்சேஷனுக்காக ஒரு முன்னாள் நடிகையின் மகளை அறிமுகம் செஞ்சு, ரெண்டு பாட்டு, நாலு பைட்டு ஒரு லவ் சாங். “அட்லி உப்புமா” ரெடி…
download
கெட்டப்பு மாத்தறேன் பேர்வழின்னு சில காரகொழம்பு கொட்டிய  மண்டைகளைப்  பார்த்துட்டு உங்களுக்கு பேதி வாந்தி எதுனா ஆனா நிர்வாகம் பொறுப்பில்ல. ஏ! பார்த்துகிடுங்க…