hqdefault

Video: IIT Madras students mocking arranged marriages
அந்த அதிமேதாவிகளுக்கு ஒரு ஆர்டினரி மொக்கைச்சாமியின் கடிதம்…

 

யக்கோவ்களா! உங்க வீடியோ பார்த்தேனுங்கோ! அய்! சபாஸ் என்ன கருத்து! என்ன கருத்து… கலக்கிட்டீங்க போங்க… பெண்ணுரிமைக்கு இதைவிட (கேவலமா) பவர்ஃபுல்லா குரல் குடுக்கவே முடியாதுங்கோ…

 

ஆனா, எனக்கு சில சந்தேகமுங்கோ… உங்களுக்கு யாருக்கும் தமிழ் சுட்டுபோட்டாலும் படிக்கவே வராதுன்னு அப்படியே தெரிஞ்சாலும், அம்மாபேட்டையில பொறந்துட்டு “ஹேய் ஐ டோன்ட் ஸிபீக் இன் டமில்யா… ஒன்லி எங்க்லிஷ்” னு பீட்டர் விடுவீங்கன்னு எங்க முப்பாத்தா மேல சத்தியமா எனக்கு தெரியும். ஷோ, இதை உங்க கோஷ்டியில (மனிதப்பிறவிகள்) யாராவது இருந்தா படிக்கசொல்லி கேட்டுக்குங்கோ…

 

அதென்ன ஐ‌ஐ‌டி ல படிக்கிறீங்கன்னா நீங்க சொல்றதெல்லாத்தையும் “டேய்… ஐ‌ஐ‌டி டா… ம்ம்‌ம்‌ம்” ன்னு வாய மூடிக்கிட்டு எல்லாரும் கேப்பாங்கன்னு எண்ணமோ? நாங்கெல்லாம் பழைய பஞ்சாங்கம்கோ. பட்டிக்காடு, பத்தாம் பசலி. அப்புறம் இந்த IIT யில படிச்சா உங்களுக்கெல்லாம் வருதே ஒரு (கண்றாவி) ஒளிவட்டம் மண்டைக்குப் பின்னாடி, அதெல்லாம் எங்களுக்கு இல்லைங்க… நாங்கல்லாம் ஏதோ சாதாரண (மானமுள்ள) மனுஷ ஜன்மங்களா காலத்தை கழிக்கறோம். நீங்கல்லாம் வேற வேற லெவல்…

 

மொதல்ல, ஒரு முக்கியமான கடமை இருக்கு…. ஒரு சாதாரணப்பட்ட ஆனால், “படிச்சாலும் பண்புள்ள, நம் நாட்டோட ஆயிரம் ஆயிரம் கால கலாச்சார பழக்க வழக்கங்களை மதிக்கிற ஒரு சராசரி மொக்கைச்சாமி “ யாக அடியேன் சிலபேருக்கு எனது நமஸ்காரங்களைச் சமர்ப்பிக்கணும். ஆழ்ந்த அனுதாபங்களையும், இரண்டு நிமிட மவுன அஞ்சலியையும் சொல்லணும்.

  1. உங்களை எல்லாம் பெத்துப்போட்டு சமுதாயத்துக்கு பெரும் கைங்கர்யம் செஞ்சிருக்கற அந்த சர்வகுண சம்பன்ன, அறிவு ஜீவிகளான மஹானுபாவர்களுக்கு
  2. உங்களைப் தர்மாஸ்பத்திரியில் பெற்றெடுத்த “செத்த பிணங்களுக்கு” (நீங்க தானே சொல்லி இருக்கீங்க?)
  3. உங்களில் யாருக்காவது கல்யாணம் ஆகியிருந்தா (இனிமேலும் ஆகுமோன்னு ???) அந்த “மானமுள்ள (?) மச்சான்ஸ்” க்கு

 

உங்களில் யாருக்காவது கல்யாணம் ஆகலைன்னா தயவு செய்து அப்படியே விட்டுடுங்கோ. மூணு குடும்பங்களாவது நல்லா நிம்மதியா இருக்கட்டும். அடியேனின் தாழ்மையான வேண்டுகோள். 

 

முதல்ல, எங்க்லிஷ்ல Stereotyping னு சொல்லுவாங்கல்லோ, அது தான் நீங்க பண்ணி இருக்கற இந்த cheap and disgusting video. உங்க (வருங்கால) மாமியார்களை கிண்டல் பண்றேன் பேர்வழின்னு உங்க பெண் இனத்தையே நீங்க கேவலப் படுத்திக்கிட்டீங்க. இன்னும் நல்லா இந்த கொள்கையப் பரப்புங்க. நாடு வெளங்கிடும்.

என்ன சொன்னீங்க? You’ll have no no life because you will be a wife ஆ? அப்போ நீங்கல்லாம் “பொணத்துக்குப் பொறந்ததுகளா?” ஆமா, உங்க அம்மாக்கள் wife ஆகித்தானே உங்களைப் பெத்துருப்பாங்க?  அவங்க wife ஆன உடனேயே life இல்லாம போன பிணங்கள் தானே? நாங்களா சொல்றோம் இதை? நீங்கதானே சொல்லி இருக்கீங்க?

அட! இப்போ தாங்க இந்த மரமண்டைக்கு புரியுது, நீங்க ஏன் உங்க அம்மாக்களை “MUMMY” ன்னு கூப்பிடறீங்கன்னு. முற்றும் கற்றுணர்ந்த தீர்க்கதரிசிகள் நீங்கல்லாம். ப்ப்ப்ப்பா….

அப்புறம், சப்பாத்தி சாம்பிள் அனுப்ப சொல்றீங்க? முதல்ல உங்களில் எவளுக்காவது சூடு தண்ணி வைக்கத் தெரியுமானு எனக்கு தெரியலை. கண்டிப்பா கிச்சன் பக்கமே தலை வச்சு படுத்திருக்க மாட்டீங்க. எல்லாத்தாயும் உங்க பெற்றோர் கொண்டுவந்து கையில கொடுத்து வாயில ஊட்டி விட்டிருப்பாங்க. அவ்வளவு செல்லம். நீங்க வெறும் புத்தகம் மட்டுமே வாழ்க்கைன்னு படிச்சி தள்ளி இப்போ IIT ல வந்து குப்பை கொட்டறீங்க.

ஒரு நாளாவது அம்மாவுக்கு கிச்சன் ல கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவோம். ஒரு காபி போடறது, காய் நறுக்கறது மாதிரி சின்ன சின்ன உதவிகள் கூட நீங்க செஞ்சிருந்தீங்கன்னா கண்டிப்பா இந்த மாதிரி ஓட்டு மொத்த குடும்பத்தையே கைக்குள்ள வச்சு கவனிச்சுக்கற மனைவி & அம்மா (உங்க அம்மாக்கள் உட்பட) மாதிரியான “தெய்வங்களை” கிண்டல் பண்ணி ஒரு கேவலமான வீடியோ பண்ண உங்களுக்கு தோன்றியிருக்காது.  அவங்க எல்லாம் வளர்க்கலைன்னா நீங்க இங்க IIT ல வந்து _____ ட்ட முடியாது.

 

படிப்பு, பட்டம் இதெல்லாம் தான் உங்களை radical ஆ யோசிக்க வைக்குதுன்னா, அதுக்கு பேரு படிப்பே இல்லை. பண்பை கற்றுத்தராத எந்த படிப்பும் படிப்பே இல்லை. உங்க விடியோவே அதுக்கு சிறந்த சாட்சி.

Making babies in no time! கிண்டலா இருக்கு? உங்க அம்மா இப்படி நினைச்சிருந்தா நீங்க இப்படி _____ட்டிக்கிட்டு வீடியோ எடுத்திருப்பீங்களா? ரதி அக்னிஹோத்ரிகளா!!!

 

கடைசியா, நம்ம நாட்டோட பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் உங்க கூந்தலுக்கு சமம்னு தானே இந்த “புரட்சிகரமான” வீடியோ எடுத்திருக்கீங்களே? அதை ஏன் புடவை கட்டிக்கிட்டு எடுக்கணும்? Bikini போட்டு பாடி எடுத்திருந்தா இன்னும் மேட்ச்சிங்கா கலக்கலா இருந்திருக்கும் இல்ல? காதுல பெரிய ஜிமிக்கி வேற? இதுக்கு மட்டும் நம்ம டிரேடிஷனல் காஸ்ட்யூமா? என்னாங்கப்பா உங்க நியாயம்?

 

என்னவோ போங்களா! இந்த மொக்கைச்சாமிக்கு அவ்ளோ தான் சொல்லத் தெரியும்.

 

அப்புறம், shoe size 10, it matters baby ன்னு (அசிங்கமா) கண்ணடிச்சு சொல்றீங்களே அப்போ உங்களுக்கு “எல்லா மேட்டருமே” விவரமா தெரியும் இல்ல? அப்புறம் என்ன? அடுத்த முறை, கல்யாணமே கேவலம்னு ஸிட்ரெயிட்டா அடுத்த ஸ்டேஜுக்கு போறதைப் பத்தி வீடியோ?

maxresdefault

செய்வீர்களா? செய்வீர்களா?

==========