pizza

 

ஒரு நல்ல அமைதியான நாளில் அதான் தினமும் காலங்காத்தால டி‌வியில வந்து

“—— ராசிக்காரர்களுக்கு நன்மைகள் சற்று அதிகமாகவே நடைபெறக்கூடிய ஒரு அற்புதமான நல்ல நாளாக இருக்கிறது”  ன்னு எல்லா ராசிக்குமே ஒரே மாதிரி (மனசாட்சி இல்லாம பொய்) சொல்லுவாரே ஒருத்தர் அது மாதிரி ஒரு நாளில். தினம் வீட்ல மண்டகப்படி வாங்கறவனுக்கு “இன்னும் சற்று அதிகமாகவே” வா  ன்னு கேட்டு மெர்சலாகினாலும் உக்கார்ந்து பார்ப்பாங்களே அந்த மாதிரி ஒரு நாளில்…

நல்லா காலை உணவு உண்டு களைத்த தொண்டன்  மாதிரி சோபா (SOFA தாங்க) ல உட்கார்ந்து டிவி பார்த்துகிட்டு இருந்தேன். ஒரு சின்னப் பையன் 16-17 வயசு இருக்கும். பார்ட் டைம் வேலை செய்யறான் போல வந்து வாசல்ல  கூப்பிட்டான். நானும் போய் என்ன தம்பின்னு (இங்கிலீஷ் தான்) கேட்டேன். அவன் எதோ

 

பிட்சா கம்பனி புது பிரான்ச் பக்கத்து ஷாப்பிங் மால்ல ஓபன் பண்ணிருக்காங்க. அதான் ப்ரோமோஷன் போட்டிருக்காங்க. நீங்க என்ன பிட்சா விரும்பி சாப்டுவீங்க?    ன்னு கேட்டான்.

 

ஒரு 2 நிமிட இடைவெளிக்கு பிறகு… சொன்னேன்.

 

தம்பி, நான் பிட்சா சாப்டறது இல்லை. 

 

ஆஹ்? என்ன? திரும்ப சொல்லுங்க

 

ஆமாம் தம்பி, நான் வீட்ல இருந்தா பிட்சா சாப்டறது இல்லை. 

 

ஆச்சர்யமா இருக்கே. நீங்க சாப்டதே இல்லையா

 

நான் இப்போ என்ன சொல்லிட்டேன்? வீட்ல இருந்தா சாப்டறதுக்கு நெறைய ஐட்டம் இருக்கும். 

 

(மைண்ட்வா ய்ஸ்: இந்த காஞ்சு போன ரொட்டியில போன வாரத்து பழைய காய்கறிகளை கட் பண்ணிப் போட்டு, ஏதேதோ கெட்டவார்த்தையில திட்ற மாதிரி பேர்ல இருக்கும் ஸாஸ்  எல்லாம் ஊத்தி, தொங்கு சட்டசபை இழுபறி மாதிரி எவ்வளவு இழுத்தாலும் வந்துகிட்டே இருக்கற சீஸ் எல்லாம் சேர்த்து… அய்யய்ய)

 

தன் முயற்சியில் மனம் தளராத விக்கரமாதித்தன்: அப்போ நீங்க பிட்சா சாப்பிட்டதே இல்லையா

 

(மைண்ட்வாய்ஸ்: பிட்சா பிரதர், நான் ஏற்கெனவே ஒரே கொழப்பத்துல வாழ்ந்துக்கிட்டிருக்கேன் பிரதர். நீங்க வேற என்னை இப்படி இன்வெஸ்டிகேட் பண்றது நல்லா இல்ல பிட்சா பிரதர்….)

 

ஏன் இல்ல? சாப்பிட்டிருக்கேனே. எப்போவெல்லாம் ட்ராவல் பண்ணும்போது வேற ஒண்ணும்  கெடைக்கலயோ  அப்போ 

 

(மைண்ட்வாய்ஸ்: டேய்… ஒரே மாசத்துல மூணு வெவ்வேற நாட்டுல இருக்கற மாதிரி எல்லாம் ஆகும்டா. சோறுன்னு ஒண்ணை கண்ணுல பார்ப்பதே நம்மூர்ல நேர்மையான அரசியல்வாதியைப் பாக்கறது மாதிரி ரொம்ப ரேர் டா. அப்போதான் வேற வழி இல்ல, வீட்லயாவது ஒரு தயிர் சாதமாவது சாப்ட்டு உயிர் வாழ்ந்துக்கறேன் டா. ஏன்டா படுத்தற?)

 

இல்லை சார்…. நான் கேக்கறது… 

 

ஓகே தம்பி… இதுக்கு மேல என்னால முடியாது. நீ தப்பான ஆள் கிட்ட டைம் வேஸ்ட் பண்ற… 

 

அப்போ பார்த்தான் பாருங்க ஒரு பார்வை… லோன் கேட்டு வர்றவங்களை (சில) பேங்க் அதிகாரிகள் பாக்கற பார்வை… “பிட்சா திங்காத ஒரு பிராணியை இப்போ தான் பார்க்கறேன்” ங்கற  மாதிரி…

 

(மைண்ட்வாய்ஸ்: சரிதான்.. நீ என நெனைக்கறேன்னு உன் பாடி லாங்க்வேஜ் சொல்லுது தம்பி…)

 

நீ பெட்டெர் அடுத்த வீட்டுக்கு கெளம்பு 

 

ஹேய்… நில்லு… ஒரு டம்ளர் தண்ணி சாப்டறியா ? (எப்பவுமே யார் இப்படி வந்தாலும் கேட்பது வழக்கம்) 

 

எதோ அவங்க ஊர்ல பெத்த மீசை வச்சு ஓடம்பெல்லாம் சந்தனம் பூசிக்கிட்டு வாய் ஃபுல்லா வெத்தலை பாக்கு போட்டு கொதப்பி போற வர்றவன் மேல எல்லாம் துப்பிவைக்கும் நாட்டாமை ஒருத்தர்…

 

ஏலே சம்முவம்… பிட்சா திங்காதவங்க ஊட்ல ஒரு வாய் தண்ணி கூட யாரும் குடிக்கக் கூடாதுரா … அவிங்கள ஊரைவிட்டே தள்ளி வைக்கறேண்டா… அவிங்க கிட்ட அன்னந்தண்ணி யார் எடுத்தாலும் அவிங்களையும் ஊற விட்டு ஒதுக்குடா… இது இந்த நாட்டாமையோட தீர்ப்புடா… ஏலே சம்முவம் எட்றா வண்டிய… 

 

ன்னு தீர்ப்பு சொல்லிட்டாரு போல…

 

இல்லை சார்… பரவாயில்லை… நான் வர்றேன்… பை… 

 

பையன் எஸ்கேப்பு…