image

My email to Vikatan Editor on this photo… கண்டனம் தெரிவிக்க விரும்பினால், write to: av@vikatan.com, editor@vikatan.com

To
பதிப்பாசிரியர் (Vikatan Emagazine)
விகடன்

(Dear Editor எனத் துவங்க மனம் வராததாலும், Dei Editor என கண்ணியமற்று விளிக்க விரும்பாததாலும்)

TO WHOMEVER IT MAY CONCERN

பத்திரிகை தரம், தர்மம், மதநல்லிணக்கம், மரியாதை எதுவுமே இல்லாது ‘நாமம்’ என்ற ஒரு மதத்தினரின் புனித சின்னத்தை அவமதிக்கும் வகையில் இன்று ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறீர்கள். அதன் படப்பிரதி இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

திரு. எஸ். எஸ். வாசன், திரு. எஸ். பாலசுப்ரமணியன் போன்ற ஜாம்பவான்கள் வளர்த்த, கல்கி, மதன் உட்பட பல மரியாதைக்குரிய எழுத்தாளர்களைக் கண்ட விகடனா இது என வியப்பும், ஏமாற்றமுமே ஏற்படுகின்றன.

இந்த செய்தியை சொல்ல வேறு எத்தனையோ விதங்கள் இருக்க, “நாமம்” என்ற சொல்லை கேவலமான பொருள் படும்படி உபயோகப் படுத்தி இருப்பதும், அதை சரி செய்யாமல் அப்படியே பதிவேற்ற அனுமதித்ததில் இருந்தே, இன்றைய விகடனின் தரமும், இப்போது இங்கே இதெல்லாம் சகஜம் என்றும் நன்கு புரிகிறது.

கடைசியாக, விகடனில் தைரியம் உள்ள (இன்றைய விகடனின் தரத்தில் இறங்கிச் சொல்ல வேண்டுமானால், “நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கற”) ஆசாமிகள் யாரேனும் இருந்தால், பிற மதங்களின் சின்னங்களை அவமதிக்கத் துணிவார்களா எனக் கேட்கத் தோன்றுகிறது.

வேற்றுமையில் ஒற்றுமையாய், சகிப்புத்தன்மையுடன் வாழும் ஒரு சமூகத்தில், இது போன்று ஒரு பிரிவினரின் நம்பிக்கைகளையும், சின்னங்களையும் மட்டும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதையும் விகடன் போன்ற ஒரு பத்திரிக்கை செய்வது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.

முடிந்தால், ETHICS & CODE OF CONDUCT in Journalism, EDITORIAL DUTIES போன்றவற்றை கற்றுக் கொண்டும், எல்லா மதங்களையும் மதிக்கவும் பழகிக் கொண்டு, உங்கள் நிறுவனர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் வராது பத்திரிக்கை நடத்துங்கள்.

ராகவன்

Advertisements