punch

தட் “யோவ்! மூடிட்டு ஓட்டுய்யா மொமண்ட்”
————————
இன்னொரு நாள் இன்னொரு இடம் இன்னொரு ஆள் பஞ்ச் பாலாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள…

இடம்: ஏறத்தாழ 20 வருடம் முன்பு சென்னையின் புறநகர் ஒன்றில் ஸ்டேஷன் விட்டு இறங்கி ஊருக்குள் செல்ல குதிரை வண்டிகள் (அப்படியா என்று மூக்கில் விரல் வைப்பவர்கள் வேற்று கிரக வாசிகளே) நிற்கும் இடம்

காலம்: பஞ்ச் பாலா ஃபுல் ஃபார்மில் இருக்கும் நல்ல; அவரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆளுக்கு பழுத்த ராகு

நேரம்: இரவு பஸ்கள் குறைந்து வேறு வழியின்றி குதிரை வண்டிகளை நாடவேண்டிய

ஆள்1: வண்டிக்கார தாத்தா. மற்றும் பாவம்… அவர் பாட்டுக்கு பேச ஆளின்றி தவிக்கையில் கம்பெனி குடுக்கும் அவரது “பேபி சுந்தரி” என்ற அழகான பெயர் (மட்டும்) உடைய குதிரை (மாதிரி)

ஆள்2: நம்ம பஞ்ச் பாலா

———————————-
சென்னைக்கும் அதன் சந்தடி; நெரிசல்; ஸடேஷன்லேர்ந்து நாலு நிமிட வாக் தான் என்று சொல்லிவிட்டு நாக்கு தள்ளும் வரை நடக்க வைக்கும் சென்னை வாசிகளின் சகவாசம் என அனைத்துமே புதிதான சமயத்தில் ஒரு நன்னாளில் நம் பஞ்ச் பாலாவும் அவருடன் குடும்பத்தில் சிலரும் கோவிலுக்குச் செல்ல குதிரை வண்டியில் போக முடிவெடுத்தனர்.

நம் பேபி சுந்தரிக்கும் அதன் (MAM போன்ற) பெருமை வாய்ந்த ஓனருக்கும் வாய்த்தது அதிர்ஷ்டம். அவர்கள் அந்த வண்டியில் ஏறி உட்காரப்போக, ஒரு நிமிடம் வண்டி பின்பக்கம் கீழே சாய… பேபி சுந்தரியோ… ஹீரோயினிகளை முதன் முதலில் பார்க்கும் ஹீரோ (கருமம்) வைப் போல வானில் எழும்ப… அனைவரும் பதறி ஓவென்று அலற… ஆனால் நம் பேபி சுந்தரியும் அதன் சூப்பர் ஓனரும் ஈலான் மஸ்க்குக்கு ஒரு பைசா தராமல் ஃப்ரீயாக ஒரு ஸ்பேஸ் ட்ரிப்பே போய் வந்த சந்தோஷத்தில் கூலாக பூமியில் லேண்ட் ஆக… அலறியடித்த ப.பா வின் குடும்பத்தாரை ஓனர் தாத்தா சமாதானப்படுத்தினார். பின் அவரது பேபி சுந்தரியின் பிரதாபங்களை அடுக்க ஆரம்பித்தார்.

“அட பயப்படாதீங்க! ஏறி உக்காருங்க எம் பேபி சுந்தரி எப்படிப் போகும் பாருங்க!”

என்று ஆறுதல் அளிக்க அனைவரும் ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு (அதாவது பேபி சுந்தரியின் பாடி கண்டீஷனைக் கருத்தில் கொண்டு அவர்கள் போய் இறங்கும் வரை அது உயிரோடு இருக்கணுமே என்ற கவலையில்) ஏறி அமர்ந்தனர்.

வழியெங்கும் முரளி போல் “எம்பாட்டு எம்பாட்டு” என்று அழுது தீர்க்காமல் தாத்தா கலகலவென பேசிக்கொண்டே வர (முயல) …

ஏற்கெனவே கடுப்பில் இருந்த ப.பா களத்தில் குதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகி ரெண்டு பேரும் கே. சேதுவும் ஜோசியரும் போல தனித்தனியா கத்திகிட்டாங்க (அதாவது ப. பா கேள்வி கேட்க அவர் பதில் சொல்றாராமா!)

தாத்தா: அட பயப்படாத ஏறி உக்காருங்க! நம்ம பேபி சுந்தரிங்க!

ப. பா: டேய்! (கவுண்டமணி மாதிரி யாராருந்தாலும் அப்படித்தான் கூப்டு பழக்கம்) நல்லா தான் பேசற. ஆனா வண்டி வேகமா போகவே இல்லியே! ம்ம்ம்ம்… என்ன பேரு சொன்ன?

தாத்தா: பேபி சுந்தரிங்க! ஏன் சாமி கேக்கறீங்க?

ப. பா: ஏண்டா பேரு வச்சியே பேபி சுந்தரின்னு அதுக்கு சோறு வச்சியாடா? அது எப்படி இருக்கு பாரு?

தாத்தா: ஏஞ்சாமி? என் பேபி சுந்தரிக்கு எல்லாமே வாங்கிப் போடுவேங்க.

ப பா: சர்தான்… குதிரைக்கு கொள்ளு கிள்ளு வைக்கிறியா? இல்ல நீயே அதையெல்லாம் தின்னுர்றியா?

தாத்தா: அட நம்ம பேபி சுந்தரி எப்படி போகும் பாருங்க! பத்தே நிமிஷத்துல கோவிலுக்கு போயிடுவோம்.

ப. பா: (மைண்ட்வாய்ஸ் ஆனா கொஞ்சம் சத்தமாக) க்க்கும்.. அதுக்குள்ள அது ஒரேடியா போய் சேர்ந்துடும் போல…

தாத்தா: சரியா காதுல விழலைங்க! சாமி என்ன சொல்றீங்க?

ப பா: டேய் பேசாம ஓட்றா… பேரப்பாரு… பேபி சுந்தரி ம$$ (கூந்தல்) சுந்தரின்னு…

வண்டிக்குள் இருந்தவர்கள் சிரிப்பு அடங்க வெகு நேரமாச்சு… ஆனால் ப. பா வோ அஸ்யூஷுவலி சீரியஸாக “மலர்ந்தும் மலராத… தானநன நான…”

தாத்தா (அப்பாவி) பாவம் தன் பேபி சுந்தரியின் கெப்பாகுட்டியை எண்ணியோ… இல்லை தான் முத்துவை விட ஸமார்ட்டான ட்ரைவராக இருப்பதாலோ மனம் மகிழ்ந்து நாங்கள் சிரிப்பதாக எண்ணி அவரும் சிரித்துக் கொண்டே ஓட்டினார்…

இன்றும் நினைத்துப் பார்த்தால் ப. பா வின் நக்கலும் பேபி சுந்தரியும் அதன் ஓனரும் சிரிக்க வைக்காமல் போவதில்லை.

#பஞ்ச்பாலா