No automatic alt text available.No automatic alt text available.

#consumerawareness #நுகர்வோர்விழிப்புணர்வு

இப்படி ஒரு கான்ட்ரவர்ஸியல் பதிவு போட்டே ஆகணுமான்னு நெடுநாளாவே யோசனை. ஆனால் இன்னிக்கு தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
———————–
இந்த பதிவு இப்போ சில காலமாகவே பரபரப்பாக பேசப்படும் #ஆர்கானிக் #Organic என்னும் கான்செப்ட் பற்றியது. அதனால், டிஸ்கியாக… நான் ஒரு கார்ப்பரேட் கைக்கூலி, அந்நிய பன்னாட்டு கம்பேனிகளின் அடிமை, பாரம்பரிய மரபு சார் கொள்கைகளின் விரோதி, அமெரிக்க (அதானே இன்னும் வரலையேன்னு நெனச்சேன்) ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டு… என gate ஐ ஆட்ட விரும்பினால் அப்டீக்கா தள்ளிப் போய் ஆட்டவும்… எனக்கு உருப்படியான பல வேலைகள் இருக்கு….
———————–
இந்த பதிவு ஒன்றாக இருந்தால் நீளமாக இருக்கலாம்… இப்போல்லாம் யாருக்கு படிக்க டைம் இருக்கு… அதனால் 2 அல்லது 3 பாகமாக எழுதலாம்னு நினைக்கறேன். யாருக்கு இந்த பதிவு முக்கியம்? நிச்சயம் அன்னாடங்காச்சிகளுக்கோ அல்லது அம்பானி ரேஞ்சில் இருப்பவர்களுக்கோ இ… ல்லை…

அப்புறம்… கார்ப்பரேட் கம்பெனிகள் தான் நுகர்வோரை, விவசாயிகளை ஏமாற்றி கொள்ளை லாபம் பார்க்கின்றன என்று திடமாக நம்பும்… எதுக்கெடுத்தாலும் நாம் நம்ம முன்னோர் வழியை மறந்துட்டோம் னு சொல்லிக்கிட்டு வாங்க… காலைக்கடனுக்கு செங்கல் மூன்றை அடுக்கி வைத்து போவோம்… னு (நல்லவேளையா இதுவரை சொல்லாத…) போராளீஸ்க்கு …

இது… மாச பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் கேஸ் (லண்டன்ல) தோத்துப்போன மல்லையா மாதிரி அடுத்து என்ன பண்ணலாம்னு தீவிர யோசனையில் ஆழும்…

இரவில்.ஏஸியை “அதான் கூலிங் இருக்கே” ன்னு இரண்டு முறை அலாரம் வைத்து எழுந்து அணைத்து மீண்டும் போடும்…

பருப்பு விலை அதிகமானால், நாளில் ஒரு முறை சாம்பார் சாப்பிடுவதைக் குறைக்கும்… கையில் (refurbished/outdated) ஆப்பிள் ஐஃபோன் வைத்துக்கொண்டு… அமெரிக்காவில் வாங்கி அரையே அரைநாள் போட்டதால் “என்ன பண்ண? பழகிடிச்சு” ன்னு சொல்லிக்கிட்டு அரை நிஜாருடன் வாக்கிங் போகும்…

ஆர்கானிக் என்ற பெயருக்காக எதையாவது 3 அல்லது 4 மடங்கு விலை கொடுத்து வாங்கி… சாப்பிட்டுக்கிட்டே வந்தும்… ஏதும் பிரயோஜனம் இருக்கா? அதே பொருள்…ஆனா சாதாரண பிராண்ட்… அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்? னு கேட்டா… எனக்கு ரொம்ப சுகர்… என் அப்பா தாத்தா எல்லாருக்கும்… இது எங்க பரம்பரை சொத்து… ஹீ ஹி… னு சப்பைக் கட்டு கட்டும்… #மிடில்க்ளாஸ்மண்டை களுக்காக…

வேளாண்மை, உணவு சம்பந்தமான (Food & Agribusiness) இண்டஸ்ட்ரியில் பதினான்கு ஆண்டுகளாக பணிபுரிபவன் என்பதால், சில விஷயங்கள்/ கேள்விகள் எனக்கு லாஜிக்கல் ஆக புரிபடவே இல்லை…

உண்மையில், genuine ஆர்கானிக் பொருட்களையும், நிறுவனங்களையும் வரவேற்கிறேன்… ஆனால் ஆர்கானிக் என்று போடுவதாலேயே மக்கள் மடையர்கள் போல நம்பி வாங்குவார்கள் என்ற எண்ணத்தில் எதை வேண்டுமானாலும் செய்யும் போலிகளை… நுகர்வோர் (consumers) அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்… எப்படிக் கண்டு கொள்ளலாம்? என்பதைப் பற்றி எழுதவே இந்த பதிவு…
——————–
2012 இல் Canada வில் ஒரு செமினாரில் நான் கேட்டது… consumers purchase behavior என்ற தலைப்பில் அமெரிக்கர் ஒருவர் சொன்னது… ஒரு லெவலுக்கு மேல்… natural, organic, fresh, “free-from XXX”, “non-XXX” இதைப் பற்றியெல்லாம் ஒரு பொருளை வாங்கச் செலவிடும் சில நொடிகளில் ஒரு consumer சிந்திப்பதே இல்லை… சரியா? என் விஷயத்தில் அது 1000% உண்மையே… இதை மனதில் வைத்துக்கொண்டு மேலே படிக்கவும்…

முதலில், இந்த ஆர்கானிக் னா என்ன? என்ன?
உலகிலேயே யாரிடமும் இன்னும் சரியான definition இதுவரை இல்லை… அதுதான் நிதர்சனம்… நாம் எதுவெல்லாம் கெமிக்கல் என்று நினைக்கிறோமோ… அதுவெல்லாம் முழுக்கவும் கெமிக்கல் இல்ல…. அதேபோல, இதெல்லாம் ஆர்கானிக்கா இருக்கும்னு நினைக்கிறோமோ… அதுவெல்லாமும் இல்லை…. உதாரணமா, உப்பு ஒரு கெமிக்கல்… தண்ணீர் ஒரு கெமிக்கல்…

அப்போ ஆர்கானிக்னா? கெமிக்கல் இல்லாத விவசாயமா?
இருக்கலாம்… அது என்ன inputs (விதை, மருந்துகள், உரம்) உபயோகப்படுத்தப் படுகிறதுங்கறதைப் பொறுத்தது…

ஆனால், கெமிக்கல் எதுவும் உபயோகப்படுத்தப் படவில்லைன்னு வாங்குபவர்களுக்கு எப்படித் தெரியும்? யார் அதை prove பண்ண முடியும்?
அதுக்கு தான் certification agencies எனப்படும் நிறுவனங்கள் உள்ளன…

ஆனா, இந்த நிறுவனங்கள் உண்மையில் நம்பத்தகுந்ததவையா? இல்லை “மன்னார் அண்ட் கம்பெனிகளா?” வெப்சைட், கஸ்டமர் கேர் எதுனா இருக்கா? யார் இந்த certification agency மூலம் இன்ஸ்பெக்ஷன் செய்வது?
நீங்க ஒரு consumer ஆ ஆர்கானிக்குனு சொல்லி விக்கறவங்க கிட்ட கேக்க வேண்டிய கேள்விகள் இது… நீங்க எப்பவாவது இதை கேட்ருக்கீங்களா? கேட்டுதான் பாருங்களேன்…

(மீண்டும் வருவோம்ல…)