Water_molecule_(1).svgPart 2 – #நுகர்வோர்விழிப்புணர்வு #consumerawareness

அதாவது #chemophobia என்ற ஒரு வியாதி உண்டு… அது என்ன செய்யும் என பார்ப்பதற்கு …முன். ஒரு பயங்கரமான கெமிக்கலை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்…. டைஹைட்ரஜன்மொனொக்சைடு … இதை உலகிலுள்ள 86 சதவிகித மக்கள் முழுவதும் தடை செய்ய வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளனர்… அப்படி என்ன பெரிய பாக்கியராஜ் கூறிய முருங்கைக்காய் விவகாரம் போல் முக்கியமானதா என்று கேட்பவர்களுக்காகவே கீழே உள்ள பத்தி…

What is Dihydrogen Monoxide?
Dihydrogen Monoxide (DHMO) is a colorless and odorless chemical compound, also referred to by some as Dihydrogen Oxide, Hydrogen Hydroxide, Hydronium Hydroxide, or simply Hydric acid. Its basis is the highly reactive hydroxyl radical, a species shown to mutate DNA, denature proteins, disrupt cell membranes, and chemically alter critical neurotransmitters.

புரிகிறதா? இது ஒரு பயங்கரமான நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற #உயிர்கொல்லி #கெமிக்கல்… இது நுரையீரலுக்குள் செல்வதால் உலகில் பல லட்சம் மனிதர்கள் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர். அவ்வளவு கொடுமையானது… ஆனால் இது உலகம் தோன்றிய காலம் தொட்டே உள்ளது எனவும் அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இப்போ நாம் சொல்லவேண்டாம்? அது என்ன அப்படி கொடுமையான கெமிக்கலை எப்படி விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கலாம்? அவர்களை எல்லாம் நிற்கவைத்து சுட வேண்டாமா?

நம் முன்னோர்களுக்கு இந்த கெமிக்கல் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை… அவர்கள் முழுக்க முழுக்க #இயற்கைமுறைசார்ந்த வாழ்க்கையே .வாழ்ந்தனர்.. நாம் தான், நம் ஜெனெரேஷன் தான் #பொருளாதாரம் வளர்ச்சி என்ற பெயரில் கண்ட கண்ட கருமாந்தரங்களையும் கண்டுபிடித்து தொலைக்கிறோம்… பின் அவஸ்தைப் படுகிறோம்…

இது இயற்கைக்கு நாம் செய்யும் பச்சைத் துரோகம்… இயற்கை அன்னை நம்மை மன்னிக்க மாட்டாள்… நம் வருங்கால சந்ததிகள் நம்மை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவர்… நம் கடமையை நாம் சரியாகச் செய்ய வேண்டுமென்றால்… இந்தக் கொடுமையான #ஆட்கொல்லி கெமிக்கலை உடனடியாக ban அதாவது தடை செய்ய நம் அரசாங்கத்தையும், சட்டங்களை இயற்றுவோரையும் பிடித்து உலுக்குவோம்… வாருங்கள்…
————————–
என்னடா? இது என்ன கெமிக்கலோன்னு வயித்துல புளியைக் கரைக்குதா? மேலும் இதைப்பற்றிய விவரங்கள் அறிய… இதோ இணையதளம்… dhmo.org படித்துப்பார்த்து உங்களை முடிந்த அளவு காப்பாற்றிக் கொள்ளும் வழியை யோசியுங்கள்… http://dhmo.org/facts.html

எத்தனை பேர் இதை தடை செய்ய வேண்டும் என கூறுகிறீர்கள்?